புதன், 5 அக்டோபர், 2011

Steam car for sale: நீராவி உந்து விற்பனைக்கு..

நீராவி கார் விற்பனைக்கு..

First Published : 02 Oct 2011 12:00:00 AM IST


உலகின் மிகப்பழமையான உபயோகத்திலுள்ள கார் ஏல விற்பனைக்காக வந்துள்ளது. லா மார்க்யூஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கார் 127 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 1884-ம் ஆண்டு ஃபிரான்சில் தயாரிக்கப்பட்ட இந்தக் கார் நீராவியினால் இயங்கக்கூடியது. 38 மைல் வேகத்தில் செல்லும் இந்தக் கார், அதற்குத் தேவையான நீராவியை ஓடத் தொடங்கிய 45 நிமிடத்தில் தயாரித்துவிடும். இதற்கு பல உரிமையாளர்கள் இருந்துள்ளனர். அதில் ஹென்ரி டோரியல் என்ற ஃபிரெஞ்சு ராணுவ அதிகாரி ஒருவர் 81 ஆண்டுகள் இதனைச் சொந்தமாக வைத்திருந்தார். இந்தக் கார் ரூ. 10 முதல் 12 கோடி வரை விற்பனையாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக