புதன், 5 அக்டோபர், 2011

மறவன்புலவு சச்சிதானந்தனின் தம்பி இலங்கை எழுத்தாளர் ஆ.கந்தையா காலமானார்

மறவன்புலவு சச்சிதானந்தனின் சகோதரர்
இலங்கை எழுத்தாளர் ஆ.கந்தையா காலமானார்

First Published : 04 Oct 2011 08:47:42 PM IST


சென்னை, அக். 4: இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் முனைவர் ஆ. கந்தையா (84) ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் திங்கள்கிழமை (அக். 3) காலமானார். இவர் இலங்கை எழுத்தாளர் மறவன்புலவு சச்சிதானந்தனின் சகோதரர் ஆவார்.காலஞ்சென்ற முனைவர் ஆ.கந்தையா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சென்னை பச்சையப்பன் கல்லூரி, லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றவர். இவர் கொழும்பு இந்துக் கல்லூரி, பலாலி ஆசிரியர் பயிற்சி கல்லூரி, பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்கள் முதலானவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். லண்டன் மற்றும் சிட்னி பல்கலைக்கழகங்களிலும் இவர் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். 25-க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.தற்போது சிட்னி நகரில் வசிந்து வந்த கந்தையா, கடந்த வாரம் கீழே விழுந்ததால் இடுப்பு எலும்பு முறிந்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் திங்கள்கிழமை மதியம் காலமானார். அவருக்கு, மனைவி ஜெயலட்சுமி, மகன் சுதர்சன், மகள் தர்சினி ஆகியோர் உள்ளனர். தொடர்புக்கு (ஜெயலட்சுமியின் தொலைபேசி எண்): 00612 9742 1565

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக