இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்தியாவையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென வைகோ சூளுரைத்துள்ளார்.
இலங்கை அரசானது தமிழ் மக்களை காலனிப் பகுதிகள் போன்ற அடிப்படை வசதிகளற்ற இடங்களில் குடியமர்த்தி வைக்க முயற்சிக்கின்றது என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கமானது இனவாதம் கொண்டது. தமிழ்; மக்களை இனப்படுகொலை செய்த பாசிச வெறித்தனம் கொண்டது.
எனவே இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளித்து தமிழர்களுக்குத் துரோகம் செய்த இந்திய மத்திய அரசாங்கத்தையும் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளதாக ஏ.என். ஐ. ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக