பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்கும் வரை தமிழக தமிழ் உணர்வாளர்கள் ஓயப்போவதில்லை என்று தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்குலிடுவதை நிறுத்தக் கோரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னையில் 42 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இன்று திராவிடர் இயக்க தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், மூவரின் உயிரைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக