First Published : 02 Oct 2011 12:00:00 AM IST
அமெரிக்காவில் உள்ள ஜெ.எச்.லீ என்பவர் தான் வளர்ப்பதற்காக பொமேரியன் வகை நாய்க்குட்டி ஒன்றை வாங்கி வந்தார். நாய்க்குட்டியின் பெயரில் 2009-ம் ஆண்டு ஃபேஸ்புக்கில் ஒரு கணக்கைத் தொடங்கினார். அதில் நாய்க்குட்டிக்குப் பூ என்று பெயரிட்டு, அதன் நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். நாய்க்குட்டிக்கு உலகெங்கிலும் இருந்து சுமார் 25 லட்சம் இணையதள ரசிகர்கள் உருவாகியுள்ளனனர். உலகில் ஏராளமானோரால் விரும்பப்படும் அழகிய நாய் என்ற பெருமையைப் பெற்றுள்ளது பூ.""என் நண்பர்களிடம் நாயின் புகைப்படங்களைக் காட்ட வேண்டும் என்று விளையாட்டாக இணையதள கணக்கை ஆரம்பித்தேன். ஆனால் இவ்வளவு விளம்பரம் கிடைக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை''என்கிறார் நாயின் உரிமையாளர்.
கருத்துகள்
தினமணிக்கு நன்றிகள்
By madhavaraman
10/3/2011 1:11:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/3/2011 1:11:00 PM