சனி, 8 அக்டோபர், 2011

Prapakaran was not captured by Singhala Military - Wickyleaks: இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிடிபடவில்லை பிரபாகரன்!

இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிடிபடவில்லை பிரபாகரன்!’-விக்கிலீக்ஸ்

Tuesday, March 29, 2011 at 10:10 am | 1,992 views
‘இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை உயிருடன் பிடிபடவில்லை பிரபாகரன்!’ – விக்கிலீக்ஸ்
கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை எந்த விலை கொடுத்தாவது உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மே 15, 2009-ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், “விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதன் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.
அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.
ஆனாலும் ராஜபக்சேவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவுக்கும் யுத்த களத்தின் உண்மையான நிலவரம் பற்றிய சரியான தகவல் ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை. இதனால் இலங்கை அரசு விரும்பியதுபோல பிரபாகரன் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கவில்லை, என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 25, 2009-ல் புலிகளுடனான போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே கூறியதாகவும், இந்தத் தகவல் முன்னாள் வெளியுறவுச்செயலர் நாராயணனுக்கு தெரியும் என்றும், ஆனால் கடைசி வரை அதனை வெளியிடாமலேயே விட்டுவிட்டதாகவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
‘புலிகளை எதிரிகளாகவே கருதிய நாராயணன்!’
‘த இந்து’ வெளியிட்டுள்ள இன்னொரு விக்கிலீக்ஸ் கேபிளிலில், “இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் எம் கே நாராயணன் விடுதலைப் புலிகளை அடியோடு வெறுத்தார். புலிகளை எதிரிகளாக பாவித்துதான் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். புலிகள் பற்றிப் பேசும்போதெல்லாம் துவேஷமான வார்த்தைகளைப் பிரயோகித்தார்”,  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக