திங்கள், 3 அக்டோபர், 2011

Muuvar uyir -pazha.nedu hungerstrike: மூவரின் தூக்குத் தண்டனையை நீக்க வேண்டிப் பழ.நெடுமாறன் உண்ணாநோன்பு

மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பழ.நெடுமாறன் உண்ணாவிரதம்

First Published : 03 Oct 2011 04:52:17 AM IST


உண்ணாவிரதத்தில் பேசுகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. உடன், ஓவியர் வீர சந்தானம், மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்.
சென்னை, அக்.2: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி "3 தமிழர் உயிர் காப்புக் குழுவின்' ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.சென்னை காயிதே மில்லத் கல்லூரி அருகில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியது:3 பேர் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் எனும் அவசியம் இல்லை. அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினாலே போதுமானது. குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரம் அனைத்தும் ஆளுநருக்கும் இருக்கிறது. ஆளுநரே தண்டனையை ரத்து செய்யலாம்.மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி யாராவது 3 தமிழர்களுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தால் தமிழக மக்கள் சீறி எழுவார்கள். மரண தண்டனை 107 நாடுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. மரண தண்டனை உள்ள நாடுகளைவிட இல்லாத நாடுகளிலேயே குற்றங்கள் குறைவாக இருக்கின்றன. எனவே, இந்தியாவில் முற்றிலுமாக மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்றார் வைகோ.அமைச்சரவைத் தீர்மானம்: "சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநரைக் கட்டுப்படுத்தாது. எனவே அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மூவர் உயிரைக் காக்க வேண்டும்' என்றார் பழ.நெடுமாறன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக