First Published : 03 Oct 2011 04:25:39 AM IST
சென்னை, அக்.2: தமிழ் இளைஞர்களிடம் மங்கி வரும் தமிழ் உணர்வை முறையாக வளர்க்க வேண்டும் என்று சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த திமுக இலக்கிய விழாவில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.சென்னை மேற்கு மாம்பலத்தில் திமுக தலைமை இலக்கிய அணி சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா நடந்தது. இதில் பெங்களூர் தமிழ்ச் சங்கச் செயலாளர் தாமோதரனின், தமிழ்ச் சேவையை பாராட்டி அவருக்கு, திமுக இலக்கிய அணி சார்பில் பொன்னாடை அணிவித்து பரிசு கேடயத்தை வழங்கி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பேசியதாவது:அண்ணாவைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரைப் பற்றி தெரியும் என கூறுபவர்களும், அண்ணாவை முழுமையாகத் தெரிந்திருக்க மாட்டார்கள். அண்ணாவை அறிவது என்பது, அவரது எண்ணங்களை, சிந்தனைகளை, செயல்பாடுகளை, கொள்கைகளை முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் மிக குறைவு. இங்கே இலக்கியவாதிகள் கூடியிருக்கிறீர்கள். இலக்கியவாதிகளை பொருத்தவரை அவர்களது எண்ணங்கள் எல்லாம் இலக்கியத்தில் தான் அதிகம் இருக்கும். இலக்கியவாதிகளும் தமிழ் உணர்வுகளைத் தூண்டும் பணியில் ஈடுபட வேண்டும்.தமிழன் கதைகளை கேட்டே கெட்டுவிட்டான் என்பார்கள். அந்த நிலை மாற வேண்டும். இன்றைய இளைஞர்களிடம் பெரியாரிடம் பிறந்த சுயமரியாதை கொள்கைகளை, சிந்தனைகளை, தத்துவங்களை தேட வேண்டியுள்ளது. அண்ணா அந்தச் சிந்தனைகளை இளைஞர்களிடம் இனிப்பாகக் கொண்டு சேர்த்தார். சுயமரியாதை உணர்வுகளைத் தூண்டினார். இளைஞர்கள் புது உத்வேகத்துடன் தமிழ் உணர்வு கொண்டவர்களாக வீறு கொண்டு எழுந்தனர். அண்ணாவுக்கு பின்னால் தமிழ் உணர்வை இளைஞர்களிடம் கருணாநிதி வளர்த்தார்.இன்றைக்கு தமிழ் இளைஞர்களிடம் தமிழ் உணர்வு மங்கி வருகிறது. தமிழன் உணர்வை இழந்து தாழ்ந்து கொண்டிருக்கிறான்.தமிழன் என்ற வெறி இல்லாமல் உணர்வின்றி இருக்கிறான். தமிழன் மனிதனாக மாற வேண்டும். தமிழனிடம் மங்கி வரும் தமிழ் உணர்வை முறையாக வளர்க்க வேண்டும் எனறார் அவர்.முன்னதாக நடந்த கவியரங்கத்தை முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென் சென்னை இலக்கிய அணி செயலாளர் சந்திரசேகர், மாநில இலக்கிய அணி செயலாளர் கவிதைபித்தன், முன்னாள் மேயர் சா. கணேசன் ஆகியோர் பேசினர்.
நன்றி ஐயா. அறிவியல், படைப்புகள்,இலக்கியம், எழுதுவோம் தமிழில் முதலான பிற வலைத்தளங்களையும் அகரமுதல முதலான இணைய இதழ்களையும்
பதிலளிநீக்குwww.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com
www.akaramuthala.in படியுங்கள். பகிருங்கள்.
நன்றி.