வெள்ளி, 7 அக்டோபர், 2011

steave jobs gone: சிகரம் மறைந்தது

தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் சிகரம் மறைந்தது – விடை கொடுப்போம் நாமும்..

அக்டோபர் 3, 2011
ஆப்பிள் நிறுவனத்தின் முன்னனி நிறுவனர்களில் ஒருவரான ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ நேற்று தன் உடலை விட்டு சென்றார்.  தொழில்நுட்பத்தை பொருத்தவரை கணினி உலகில் கண்டுபிடிப்பில் தன் நிறுவனத்திற்கு என்று தனி அந்தஸ்தையும் என்றும் அழியாத புகழையும் அள்ளி அள்ளி கொடுத்தவர் , சுறுசுறுப்பு விடா முயற்சி, நுண் அறிவு என்று  அனைத்தையும் ஒன்று சேர அமையப்பெற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் தன் 56 வது வயதில்  தன் உடலுக்கு நிரந்தர ஓய்வு அளித்துவிட்டார் இவரைப் பற்றியும், ஐபோனில்  வெளிவந்துள்ள ஒரு புதிய தமிழ் அப்ளிகேசன் பற்றியும் தான் இந்தப்பதிவு.
படம் 1
எதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்று பெரிய நிறுவனங்கள் நினைத்த அத்தனை கணினி தொழில்நுட்பங்களையும் ஒன்று சேர இணைத்து உருவாக்கிய ஐபோன் மக்களிடத்தில் இருக்கும் வரை யாரும் ஸ்டீவ் ஜாப்ஸ்-ஐ மறந்துவிட முடியாது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து ஒன்று வெளிவரப்போகிறது அது  என்னவென்று தெரியாமல் குறிப்பிட்ட தினம் வரை காத்திருங்கள்  என்று கூறி குறிப்பிட்ட தினத்தில் ஐபோன்-ஐ அறிமுகப்படுத்திய ஸ்டிவ் ஜாப்ஸ்-ன் கடைசி நாளும் நாட்களை எண்ணியே கழிந்து விட்டது என்று நினைக்கும் போது நம்மை அறியாமல் ஏதோ ஒன்றை இழந்தது போல் தோன்றுகிறது. ஐபோன் இருக்கும் வரை என்றும் மக்களிடத்தில் நீங்கள் இருப்பீர்கள். வின்மணியின் சார்பிலும் உலகெங்கிலும் வாழும் நம் அனைத்து தமிழ் நண்பர்களின் சார்பிலும் ஸ்டீவ் ஜாப்ஸ் -ற்கு நெஞ்சார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக