First Published : 07 Oct 2011 03:11:57 AM IST
ஸ்டாக்ஹோம், அக். 6: "குவாசிகிரிஸ்டல்' எனப்படும் படிகம் போன்ற வேதியியில் கட்டமைப்பைக் கண்டுபிடித்த இஸ்ரேலிய விஞ்ஞானி டேனியல் ஷெட்மனுக்கு இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.1982-ம் ஆண்டில் ஷெட்மன் இதைக் கண்டறிந்தார். அவரது கண்டுபிடிப்பு, திண்மங்கள் தொடர்பான வேதியியலாளர்களின் பார்வையை முற்றிலும் மாற்றியது என்று நோபல் பரிசுக் குழு குறிப்பிட்டுள்ளது.இப்படியொரு கட்டமைப்பு இருப்பது சாத்தியமில்லை என்று அதற்கு முன்பு நம்பப்பட்டு வந்தது. படிகங்களில் உள்ள அணுக்கள் சீரான சாயலில் அடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகள் கருத்தாக இருந்தது. அந்த நம்பிக்கையை புத்திசாலித்தனமாகத் தகர்த்தார் ஷெட்மன். சீரற்ற சாயலிலும் அணுக்களை இட்டு நிரப்ப முடியும் என்று அவர் கணித்தார். அலுமினியம் - மாங்கனீஸ் கலவையை ஆய்வு செய்ததன் மூலம் அவரால் இந்த முடிவுக்கு வர முடிந்தது. அதற்கான ஆதாரங்களையும் காட்டினார். ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் ஷெட்மனுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. ஆராய்ச்சிக் குழுவில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஷெட்மனின் கருத்தை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டனர். தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவும் ஒப்புக் கொண்டனர். அதன் பிறகு "குவாசிகிரிஸ்டலை' ஆய்வகங்களிலேயே தயாரிக்க முடிந்தது. சவர பிளேடுகள் கண் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படும் ஊசிகள் போன்ற எஃகு உபகரணங்கள் தயாரிக்கவும் இந்த ஆராய்ச்சி பயன்பட்டது. இஸ்ரேலில் 1941-ம் ஆண்டு பிறந்த ஷெட்மன், ஹைஃபா நகரிலுள்ள தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி (இயந்திரப் பொறியியல்) பட்டம் பெற்றார். அதன் பிறகு எம்.எஸ்சி., பி.எச்டி, ஆகிய படிப்புகளையும் முடித்தார். ஹைஃபா பல்கலைக்கழகத்திலேயே இப்போதும் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பத்தாண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் அரசின் இயற்பியலுக்கான உயரிய விருது ஷெட்மனுக்கு வழங்கப்பட்டது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
The Nobel Prize in Chemistry 2011
Dan Shechtman
|
Press Release
5 October 2011The Royal Swedish Academy of Sciences has decided to award the Nobel Prize in Chemistry for 2011 to
Dan Shechtman
Technion - Israel Institute of Technology, Haifa, Israel
"for the discovery of quasicrystals"
A remarkable mosaic of atoms
In quasicrystals, we find the fascinating mosaics of the Arabic world reproduced at the level of atoms: regular patterns that never repeat themselves. However, the configuration found in quasicrystals was considered impossible, and Dan Shechtman had to fight a fierce battle against established science. The Nobel Prize in Chemistry 2011 has fundamentally altered how chemists conceive of solid matter.
On the morning of 8 April 1982, an image counter to the laws of nature appeared in Dan Shechtman's electron microscope. In all solid matter, atoms were believed to be packed inside crystals in symmetrical patterns that were repeated periodically over and over again. For scientists, this repetition was required in order to obtain a crystal.Shechtman's image, however, showed that the atoms in his crystal were packed in a pattern that could not be repeated. Such a pattern was considered just as impossible as creating a football using only six-cornered polygons, when a sphere needs both five- and six-cornered polygons. His discovery was extremely controversial. In the course of defending his findings, he was asked to leave his research group. However, his battle eventually forced scientists to reconsider their conception of the very nature of matter.
Aperiodic mosaics, such as those found in the medieval Islamic mosaics of the Alhambra Palace in Spain and the Darb-i Imam Shrine in Iran, have helped scientists understand what quasicrystals look like at the atomic level. In those mosaics, as in quasicrystals, the patterns are regular - they follow mathematical rules - but they never repeat themselves.
When scientists describe Shechtman's quasicrystals, they use a concept that comes from mathematics and art: the golden ratio. This number had already caught the interest of mathematicians in Ancient Greece, as it often appeared in geometry. In quasicrystals, for instance, the ratio of various distances between atoms is related to the golden mean.
Following Shechtman's discovery, scientists have produced other kinds of quasicrystals in the lab and discovered naturally occurring quasicrystals in mineral samples from a Russian river. A Swedish company has also found quasicrystals in a certain form of steel, where the crystals reinforce the material like armor. Scientists are currently experimenting with using quasicrystals in different products such as frying pans and diesel engines.
Read more about this year's prize |
Information for the Public Pdf 3 MB |
Scientific Background Pdf 1,3 MB |
In order to read the text you need Acrobat Reader. |
Links and Further Reading |
Dan Shechtman, Israeli citizen. Born 1941 in Tel Aviv, Israel. Ph.D. 1972 from Technion - Israel Institute of Technology, Haifa, Israel. Distinguished Professor, The Philip Tobias Chair, Technion - Israel Institute of Technology, Haifa, Israel.
http://materials.technion.ac.il/shechtman.html
The Prize amount: SEK 10 million
Contacts: Erik Huss, Press Officer, phone +46 8 673 95 44, +46 70 673 96 50, erik.huss@kva.se
Ann Fernholm, Editor, Phone +46 70 750 22 16, ann.fernholm@kva.se
The Royal Swedish Academy of Sciences, founded in 1739, is an independent organization whose overall objective is to promote the sciences and strengthen their influence in society. The Academy takes special responsibility for the natural sciences and mathematics, but endeavours to promote the exchange of ideas between various disciplins.
TO CITE THIS PAGE:
MLA style: "The Nobel Prize in Chemistry 2011 - Press Release". Nobelprize.org. 7 Oct 2011 http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2011/press.html
MLA style: "The Nobel Prize in Chemistry 2011 - Press Release". Nobelprize.org. 7 Oct 2011 http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2011/press.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக