திங்கள், 3 அக்டோபர், 2011

hunger strike for muuvar uyir-Vaiko greets nedumaran :நெடுமாறன் உண்ணாநோன்பு : வைகோ வாழ்த்து

நெடுமாறன் உண்ணாவிரதம்: வைகோ வாழ்த்து

First Published : 02 Oct 2011 03:54:31 PM IST


சென்னை, அக்.2:  இந்தியாவில் மரணட தண்டனையை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தியும், ராஜிவ் படுகொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்துசெய்யக் கோரியும் பழ.நெடுமாறன் சென்னையில் இன்று உண்ணாவிரதம் இருந்தார். அவரது உண்ணாவிரதத்தை மதிமுக பொதுச்செயலர் வைகோ தொடங்கிவைத்தார்.பின்னர் அவர் பேசுகையில், உலகில் 107 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை இருக்கும் நாட்டை விட மரண தண்டனை இல்லாத நாடுகளில்தான் குற்றங்கள் குறைவாக நடக்கிறது. தமிழ்நாட்டில் பேரறிவாளன், சாந்தன், முருகன் 3 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற கூடாது என மக்கள் கொந்தளித்து எழுந்தனர்.நீதிமன்றத் தடையால் தற்போது மக்கள் நிம்மதியாக உள்ளனர். தமிழக அரசும் சட்டசபையில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதற்கு பிறகும் மரண தண்டனையை நிறைவேற்ற சிலர் சதி திட்டம் தீட்டுகிறார்கள் எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்

தமிழக மீனவர்களை கொலை செய்து வரும் சிங்கள இராணுவத்தினரைக் கைது செய்து தூக்கிலிட்டுவிட்டு அதன் பின் போபர்ஸ் ஊழல் புகழ் பிரதமரை கொன்ற, கொல்லத் தூண்டியவர்களை தூக்கிலிட்டுவிட்டு, பிறகு இந்த மூன்று அப்பாவிகளை மட்டுமல்லாது நாட்டு மக்கள் எவரையும் தூக்கிலிடலாம்! என்ன செய்வது! ஒரு சிலருக்கு தூக்கிலிடுவது ஏதோ விளையாட்டு போல் ஒரு எண்ணம்! எனவே தான் புத்தர் பிறந்த நாட்டை ஆறறிவுள்ள அப்பாவிகளைக் கொன்ற நாடாக்கப் பார்க்கிறார்கள்!
By பொன்மலை ராஜா
10/3/2011 12:10:00 AM
அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் ௧௭௧(௩), ௧௬௦ கீழ் மாநில அரசும் ஆளுநரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மைய உள்துறை அமைச்சர் எதுவும் செய்யமாட்டார்.
By J.Narayanasamy
10/2/2011 5:55:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக