ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

தொண்டர்களின் உணர்வுகளை மேலிடத்தில் தெரிவிக்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


மதுரை, ஜூலை 31: தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்களின் உணர்வுகளை காங்கிரஸ் மேலிடத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தினார். திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருவதை தொண்டர்கள் விரும்பவில்லை என்று அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.  மதுரையில் தியாக சீலர் கக்கன் நூற்றாண்டு நிறைவு விழா மருத்துவக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:  தமிழ்நாட்டில் 1967-ம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரமுடியாமல் போய்விட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், சாதனைகளையும் நாம் மக்களிடம் சரிவர எடுத்துக் கூறாததே காரணம். காங்கிரஸ் பேரியக்கத்தை கக்கன் போன்ற பெரிய தலைவர்கள் வளர்த்து வந்த போதிலும் நாம் நமது கடமையை சரிவரச் செய்யாமல் இருந்ததால்தான் 42 ஆண்டுகளாக நாம் ஆட்சியை இழந்து நிற்கிறோம்.  பொதுவாழ்வில் தூய்மையையும் நேர்மையையும் கடைபிடித்து தன்னிகரில்லாத தலைவராக வாழ்ந்தவர் தியாகி கக்கன். அவர் வளர்த்த கட்சியில் நாம் இருப்பது நமக்குத்தான் பெருமை.   தமிழ்நாட்டில், மக்களுக்கு ஒளிகொடுப்பவர்கள் தாங்கள்தான் என்பது போல திமுகவினர் பேசி வருகின்றனர். தங்களைச் சூரியனாகவும், காங்கிரûஸ சந்திரனாகவும் வர்ணிக்கின்றனர். நாங்கள் சந்திரன்தான். ஆனால், வித்தியாசமான சந்திரன். நாங்கள் அவர்களுடன் இருந்தாலும் அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகிறோம்.     மத்திய அரசு வழங்கும் மானியத்தில்தால் தமிழக அரசு கிலோ ஒரு ரூபாய் அரிசி திட்டத்தை ரேஷனில் செயல்படுத்தி வருகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.7 மானியமாகத் தருகிறது என்று நான் சொன்னேன். இது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. நான் சொன்னதில் தவறு இருக்கலாம். இருப்பினும் மத்திய அரசு வழங்கும் மானியம் ரூ.5 என்பதை யாராலும் மறுக்க முடியாது.   தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் மனதில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலம் வரும்போது தங்கள் உணர்வுகளை வெளியிட அவர்கள் தவறுவதில்லை. இங்கே சிலர் பேசும்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. கூட்டணி தொடரும் என்று கூறினர். அப்போது தொண்டர்கள் கூட்டத்திலிருந்து திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற கோஷம் எழுந்தது. தொண்டர்களின் உணர்வுகளை தமிழக தலைவர்கள் புரிந்துகொண்டு அதை மேலிடத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.  
கருத்துக்கள்

ஆனால், மக்கள் காங்கிரசே வேண்டா என்று சொலகிறார்களே! செவியில் விழவில்லையா? தேவி குளம், பீர்மேடு, திருப்பதி, சித்தூர், கோலார் என எண்ணற்றத் தமிழ்ப் பகுதிகளைத் தாரை வார்த்த, தமிழினத்தைக் கொன்றொழிக்கும் காங்கிரசு மறையும் நாளே தமிழகம் மலரும் நாள் என உலகத் தமிழர்கள் சொல்லி வருவது தெரிந்தும் அதனை மறைப்பதேன்? காங். இல்லா ஆட்சியைத் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் அமைப்போம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/1/2010 3:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
you Right Mr ILAKKUVANAR Thiruvalluvan He Helping Taleeth Means Thantai Pariyan Not Come Congress so Number 1 Usless Party Congress No need to tamil Nadu this Usless party by Tamilan
 
தமிழகத்தில் காங்கிரசை முதல் நிலை இயக்கமாக்குவோம்' : மதுரையில் கக்கன் விழாவில் வாசன் பேச்சுv

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக