செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

மொழியை புறக்கணிப்பதா சீனாவில் மக்கள் போராட்டம்
 






பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2010,01:20 IST

பீஜிங் : சீனாவில் கேன்டோனீஸ் மொழியை அரசு புறக்கணிப்பதாக கூறி போராட்டம் நடந்தது.சீனாவில் 8 மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இருப்பினும் மாண்டரீன் மொழி தான் அரசு மொழியாக உள்ளது. ஹாங்காங், குவாங்டாங், ஷாங்காய், மக்காவ் உள்ளிட்ட பகுதிகளில் கேன்டோனீஸ் மொழி பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது.ஆனால், டிவி மற்றும் ரேடியோக்களில் மாண்டரீன் மொழிகளில் தான் செய்திகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் ஒலிபரப்புவதாக இந்த மொழியை பேசும் மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.குவாங்டாங் மாகாணத்தின் தலைநகர் குவாங்சோவில் நேற்று முன்தினம் பெரும்பாலான மக்கள் ஒன்று திரண்டு தங்கள் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி பேரணி நடத்தினர். இரண்டரை மணி நேரம் இந்த பேரணி நடந்தது. வன்முறை நடக்காமலிருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது."சீனாவில் 7 கோடி மக்கள் கேன்டோனீஸ் மொழியை தான் பேசுகின்றனர். எனவே, இந்த மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வற்புறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக