ஹைதராபாத், ஜூலை 31: ஆந்திரத்தில் தெலங்கானா பகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி (டிஆர்எஸ்) கட்சி 11 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஒரு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வென்றது.போட்டியிட்ட 12 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் டெபாசிட் இழந்தது. அக் கட்சியின் வரலாற்றில், தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பது இதுவே முதல் முறை.ஆளும் கட்சியான காங்கிரஸýம் 4 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.தெலங்கானாவை தனி மாநிலமாக்கக் கோரி போராட்டம் நடைபெற்றபோது, 12 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்ததையடுத்து, இத் தொகுதிகளில் இடைத் தேர்தல் ஜூலை 27-ம் தேதி நடைபெற்றது.5 தொகுதிகளில் 64-க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டதால், அத் தொகுதிகளில் வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடைபெற்றது. 7 தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை மதியமே அறிவிக்கப்பட்டபோதும், 5 தொகுதிகளில் முடிவுகள் அறிவிப்பதில் தாமதமானது.அதிக வித்தியாசம்: டிஆர்எஸ் தலைவர் கே.சந்திரசேகர் ராவின் உறவினர் ஹரிஷ் ராவ், சித்திபேட்டை தொகுதியில் 95,858 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.அவர் தொடர்ந்து 4-வது முறையாக இத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திர பேரவைத் தேர்தல்களில் அதிகபட்ச வாக்கு வித்தியாசம் இதுதான் என்று கூறப்படுகிறது.மஞ்சேரியல் தொகுதியில் 2009-ல் சுமார் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற கட்டம் அரவிந்த ரெட்டி இந்த முறை 78,047 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் 2-வது அதிகபட்ச வாக்குவித்தியாசம் இதுதான்.தருமபுரி தொகுதியில் 2009-ல் சுமார் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற கொப்புலா ஈஸ்வர் இந்த முறை 58,891 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.2009-ல் சிரிசில்லா தொகுதியில் வெறும் 173 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற சந்திரசேகர் ராவ் மகன் தாரக ராமா ராவ் இந்த முறை 44,642 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.வாரங்கல் மேற்கு தொகுதியில் கடந்த முறை 6 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வென்ற டிஆர்எஸ் வேட்பாளர் தாஸ்யம் வினய் பாஸ்கர் இப்போது 67,524 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.வெமுலவாடா தொகுதியில் தெலுங்கு தேசம் வேட்பாளராக நின்று கடந்த முறை 1,800 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற சென்னமானேனி ரமேஷ் இப்போது டிஆர்எஸ் வேட்பாளராக களம் இறங்கி 50,451 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வென்றுள்ளார்.டிஆர்எஸ் கட்சியின் மற்ற வேட்பாளர்களும் கடந்த முறையை விட இப்போது கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளனர்.நிஜாமாபாத் தொகுதியில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.சீனிவாûஸ வென்ற பாஜக வேட்பாளர் லட்சுமிநாராயணா கடந்த முறை 11,015 வாக்குகள் வித்தியாசத்திலும், இப்போது 11,981 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றுள்ளார்.சந்திரசேகர் ராவ் வலியுறுத்தல்: தெலங்கானா தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தே மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை மத்திய அரசு புரிந்து கொண்டு தனி மாநிலம் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்
திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/1/2010 3:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *8/1/2010 3:14:00 AM
+++++++++++++++++++
கருத்துக்கள்
By kabilan
8/1/2010 10:23:00 AM
8/1/2010 10:23:00 AM
By visakha
8/1/2010 10:19:00 AM
8/1/2010 10:19:00 AM
By khadin
8/1/2010 10:08:00 AM
8/1/2010 10:08:00 AM
By khadin
8/1/2010 10:08:00 AM
8/1/2010 10:08:00 AM
By tamil
8/1/2010 9:58:00 AM
8/1/2010 9:58:00 AM
By Unmai
8/1/2010 9:48:00 AM
8/1/2010 9:48:00 AM
By அன்பன்
8/1/2010 9:03:00 AM
8/1/2010 9:03:00 AM
By mohanraj jebamani
8/1/2010 8:47:00 AM
8/1/2010 8:47:00 AM
By Bharath
8/1/2010 8:43:00 AM
8/1/2010 8:43:00 AM
By VIS
8/1/2010 8:40:00 AM
8/1/2010 8:40:00 AM
By R.Krishanmkurthy
8/1/2010 7:58:00 AM
8/1/2010 7:58:00 AM
By s subramanyan
8/1/2010 7:50:00 AM
8/1/2010 7:50:00 AM
By ki
8/1/2010 7:29:00 AM
8/1/2010 7:29:00 AM
By rajasji
8/1/2010 6:10:00 AM
8/1/2010 6:10:00 AM
By arivukkan
8/1/2010 3:55:00 AM
8/1/2010 3:55:00 AM
By kuru
8/1/2010 3:41:00 AM
8/1/2010 3:41:00 AM
By thamilan
8/1/2010 3:19:00 AM
8/1/2010 3:19:00 AM
By thamilan
8/1/2010 3:02:00 AM
8/1/2010 3:02:00 AM