சென்னை, ஆக. 4: கல்வியாளரும், எழுத்தாளருமான பேராசிரியர் அ. ராமசாமி, ராஜா முத்தையா செட்டியார் நினைவுப் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ராஜா முத்தையா செட்டியார் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தமிழறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் எழுத்தாளர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழறிஞர்கள் வா.செ. குழந்தைசாமி, அறவாணன், சுப்பிரமணியன், சிலம்பொலி செல்லப்பன், கவிஞர் முனியரசன் உள்ளிட்ட பலர் இப்பரிசை பெற்றுள்ளனர். 2010-ம் ஆண்டு நினைவுப் பரிசுக்கு, பேராசிரியர் அ. ராமசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ராணி சீதை ஹாலில் வியாழக்கிழமை (ஆக. 5) நடைபெறும் விழாவில் ராமசாமிக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.
கருத்துக்கள்
தக்க அறிஞருக்கு நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது. பாராட்டுகள். அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர், உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் எனக் குறிப்பிட்டிருப்பின் படிப்பவர்களுக்கு எந்தப் பேராசிரியர் என்ற குழப்பம் வராமல் இருக்கும். பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி அவர்களின் தமிழ்ப் பேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும் நூல் இவரின் பத்தாண்டு உழைப்பில் வந்த நன்னூல். Struggle for Freedom of Languages in India நூலும் பல்லாண்டு உழைப்பில் வெளிவந்த அருமையான நூலாகும். சான்றுகளுடனும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடனும் நூல்களைப் படைக்கும் தமிழ் உணர்வாளர் பேராசிரியர் அ. இராமசாமி அவர்களுக்குப் பரிசு வழங்கும் அமைப்பிற்குப் பாராட்டுகள். பேராசிரியருக்கு வாழ்த்துகள். வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/5/2010 3:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 8/5/2010 3:13:00 AM