கோவை, பீளமேடு தகவல் தொழில்நுட்ப பூங்காவை திங்கள்கிழமை துவக்கிவைக்கிறார் முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து) கோவை ஆட்சியர் பி.உமாநாத், தமிழ்நாடு தொழி
கோவை, ஆக.2: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நல்ல தமிழில் பேசவும், கருத்துகளை மக்களுக்கு தமிழில் தெரிவிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.கருணாநிதி கேட்டுக்கொண்டார்.÷கோவை டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா திறப்பு விழாவில் தொழில் துறை முதன்மைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தமிழில் பேசியதைப் பாராட்டியும், தொடர்ந்து பேசுவதற்கு அவர் தடுமாறியதையும் சுட்டிக்காட்டிய முதல்வர் இவ்வாறு கூறினார்.÷ரூ.380 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கோவை டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை திங்கள்கிழமை திறந்து வைத்து அவர் பேசியதாவது:÷தமிழில் பேச வேண்டும் என்ற ஊக்கத்தை அரசு அதிகாரிகளுக்கு செம்மொழி மாநாடு கொடுத்துள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக தொழில் துறை முதன்மைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தமிழில் பேச வேண்டும் என எண்ணித் தவித்தார். நான்தான், ஆங்கிலத்திலேயே பேசுங்கள் என்றேன்.÷தொழில் துறைச் செயலருக்கு ஆக்கத்தை, ஊக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இது இருக்க வேண்டுமெனில், அவர் துவண்டு விடாமல் நல்ல தமிழில் பேசப் பழகிக் கொள்வதை முயற்சி செய்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.÷இன்று நடந்த நிகழ்வு ஓரிரு நிகழ்ச்சிகளில் நடைபெற்றால் தவறில்லை; எல்லா நிகழ்ச்சிகளிலும் நடைபெற்றால் அங்கெல்லாம் மாற்றி, மாற்றி உரையாற்ற முடியாது. இவர் மட்டுமல்ல அனைத்து அதிகாரிகளும் நல்ல தமிழில் பேசவும், மக்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துகளைத் தமிழில் கூறவும் பழகிக் கொள்ள வேண்டும். ÷பல்வேறு துறைகளிடம் இருந்து வரக்கூடிய கோப்புகளில் சில ஆங்கிலத்தில் இருக்கின்றன. இது அதிகாரிகளின் குற்றமோ, தலைமைச் செயலரின் குற்றமோ அல்ல. செம்மொழி மாநாடு நடத்திய பிறகாவது நமது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நல்ல தமிழில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து கோப்புகளையும் தமிழில் தயாரிக்க வேண்டும்.÷எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும், ஆங்கிலம் தெரியாது என்பதற்காக இதைக் கூறவில்லை; என்னைப் போல பலரும் இருப்பார்கள் அல்லவா, அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எண்ணத்தை வெளிப்படுத்தும் மொழியாக தமிழ் இல்லாமல் போனால் எத்தனை மாநாடுகள் நடத்தியும் பயன் இல்லை. ÷அகில இந்திய ஆட்சிப் பணியில் தமிழகத்துக்கு வருவோர் ஆங்கிலத்தில் பேசுவார்களேயானால், தமிழகத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. மொழிக்கு மதிப்பும், வளமும் சேர்க்க முடியாது. எதிர்காலத்தில் நல்ல தமிழில் பேச தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.÷பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது சென்னையில் டைடல் பூங்கா திறக்கப்பட்டது. அதற்கு பிறகு இந்தியாவில் பல தொழில்நுட்பப் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான இடங்களில் திறக்கப்பட உள்ளன. இவையெல்லாம் தொழில் வளம் பெருகவும், ஏற்றுமதி அதிகரிக்கவும், பல நாடுகளுடன் தொழில் உறவுகள் மேம்படவும் வழிவகுக்கும்.÷1988-89 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை தயாரித்துக் கொண்டிருந்தபோது தில்லியில் இருந்த காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் என்னைத் தொடர்பு கொண்டு, இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் தகவல் தொழில் பற்றி கொள்கை வகுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.÷தகவல் தொழில்நுட்பத்தில் தற்போது தமிழகம் வளர்ந்து, விரிவடைந்து இந்தியாவில் ஏற்றமிகு இடத்தைப் பெற்றிருக்கிறது என நினைக்கும்போது மறைந்த அமைச்சர் முரசொலி மாறனுக்குத்தான் நன்றி கூற வேண்டும் என்று தோன்றுகிறது.÷அந்த அளவுக்கு இந்த திட்டத்தை, இத்தனை தகவல் தொழில் பூங்காக்களை அமைக்க ஆதாரகர்த்தாவாக இருந்தவர். தமிழகத்தில் 3 ஆயிரம் இடங்களில் இருக்கும் அளவுக்குத் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ந்திருக்கிறது என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்
By Ilakkuvanar Thiruvalluvan
8/3/2010 4:33:00 AM
8/3/2010 4:33:00 AM
By Ilakkuvanar Thiruvalluvan
8/3/2010 4:29:00 AM
8/3/2010 4:29:00 AM
By kkk
8/3/2010 3:16:00 AM
8/3/2010 3:16:00 AM
By rajasji
8/3/2010 3:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *8/3/2010 3:09:00 AM