ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

கொங்கணி எழுத்தாளர் கேலேகருக்கு ஞானபீட விருது


பனாஜி, ஜூலை 31: இலக்கியத்தில் சிறந்த பங்களிப்புக்காக பிரபல கொங்கணி எழுத்தாளர் ரவீந்திர கேலேகருக்கு (85) ஞானபீட விருது வழங்கப்பட்டது.÷பனாஜியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் மீரா குமார் 2006-ம் ஆண்டுக்கான விருதை கேலேகருக்கு வழங்கினார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு ஆம்புலன்சில் கேலேகர் அழைத்து வரப்பட்டார்.÷ரூ.7 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம், சரஸ்வதி தேவியின் வெண்கலச் சிலை ஆகியவை இந்த விருதில் அடங்கும்.÷கொங்கணி, ஹிந்தி, மராத்தி மொழிகளில் 32 புத்தகங்களை கேலேகர் எழுதியுள்ளார். பத்மபூஷண், சாகித்ய அகாதெமி உள்ளிட்ட விருதுகளை அவர் ஏற்கெனவே பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக