செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

எந்திரன் பாடல் "சிடி' வெளியீட்டு விழா: மலேசியத் தமிழர்கள் அதிருப்தி


சென்னை, ஆக. 2: மலேசியாவில் நடந்த எந்திரன் பாடல் "சிடி' வெளியீட்டு விழாவில், அந்நாட்டின் அமைச்சரும் மலேசியன் இந்தியன் காங்கிரஸ் கட்சித் தலைவருமான டாக்டர் சுப்பிரமணியத்துக்கு உரிய மரியாதை அளிக்காதது, மலேசியத் தமிழர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள படம் "எந்திரன்'. இதில் "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் "சிடி' வெளியீட்டு விழா மலேசியாவின் புத்ரஜெயா சர்வதேச மாநாட்டுக் கூடத்தில் ஜூலை 31-ம் தேதி நடந்தது. இந்த விழாவுக்கு பல்வேறு தமிழ் நடிகர்களும், பிரபலங்களும் அழைக்கப்பட்டிருந்தனர். மலேசியாவிலிருந்து மலேசியன் இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அந்நாட்டின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சுப்பிரமணியம் அழைக்கப்பட்டிருந்தார். விழாவில் பங்கேற்ற அவர் மேடையில் அமர வைக்கப்படாமல், பார்வையாளர் கூடத்தில் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டார்.கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய விழாவில், பல்வேறு தரப்பினரும் மேடையில் பேசியதோடு, படம் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த நிலையில் மலேசிய அமைச்சர் சுப்பிரமணியத்தின் பெயர் விழாவில் தெரிவிக்கப்படாததோடு, வாழ்த்திப் பேசுவதற்காக மேடைக்கும் அவர் அழைக்கப்படவில்லை என்பது பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில்கூட உரிய மரியாதை தரப்பட்ட மலேசிய அமைச்சர் சுப்பிரமணியத்துக்கு, கோலாலம்பூரில் நடைபெற்ற "எந்திரன்' விழாவில் முக்கியத்துவம் தரப்படாதது ஏன்? என்பது புதிராக உள்ளது.
கருத்துக்கள்

வேணும் கட்டைக்கு வேணும் வெங்கலக்கட்டைக்கு வேணும் என்பார்கள். அதுதான் நினைவிற்கு வருகிறது. இங்கெலலாம அவரை யார் போகச் சொன்னது? அவமானப்படச் சொன்னது? அவருக்கு அவமானம் என்றால் அவர் சார்ந்துள்ள அரசிற்கும் நாட்டிற்கும் அயல்வாழ் தமிழர்களுக்கும் அவமானம் என்று எண்ண வேண்டாமா? இனியேனும் திரைப்பட மாயையில் வீழாமல் தமி்ழ்நலப் பணியில் ஈடுபடுக. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/3/2010 4:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக