vasan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
vasan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

தொண்டர்களின் உணர்வுகளை மேலிடத்தில் தெரிவிக்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


மதுரை, ஜூலை 31: தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்களின் உணர்வுகளை காங்கிரஸ் மேலிடத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தினார். திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருவதை தொண்டர்கள் விரும்பவில்லை என்று அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.  மதுரையில் தியாக சீலர் கக்கன் நூற்றாண்டு நிறைவு விழா மருத்துவக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:  தமிழ்நாட்டில் 1967-ம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரமுடியாமல் போய்விட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், சாதனைகளையும் நாம் மக்களிடம் சரிவர எடுத்துக் கூறாததே காரணம். காங்கிரஸ் பேரியக்கத்தை கக்கன் போன்ற பெரிய தலைவர்கள் வளர்த்து வந்த போதிலும் நாம் நமது கடமையை சரிவரச் செய்யாமல் இருந்ததால்தான் 42 ஆண்டுகளாக நாம் ஆட்சியை இழந்து நிற்கிறோம்.  பொதுவாழ்வில் தூய்மையையும் நேர்மையையும் கடைபிடித்து தன்னிகரில்லாத தலைவராக வாழ்ந்தவர் தியாகி கக்கன். அவர் வளர்த்த கட்சியில் நாம் இருப்பது நமக்குத்தான் பெருமை.   தமிழ்நாட்டில், மக்களுக்கு ஒளிகொடுப்பவர்கள் தாங்கள்தான் என்பது போல திமுகவினர் பேசி வருகின்றனர். தங்களைச் சூரியனாகவும், காங்கிரûஸ சந்திரனாகவும் வர்ணிக்கின்றனர். நாங்கள் சந்திரன்தான். ஆனால், வித்தியாசமான சந்திரன். நாங்கள் அவர்களுடன் இருந்தாலும் அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகிறோம்.     மத்திய அரசு வழங்கும் மானியத்தில்தால் தமிழக அரசு கிலோ ஒரு ரூபாய் அரிசி திட்டத்தை ரேஷனில் செயல்படுத்தி வருகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.7 மானியமாகத் தருகிறது என்று நான் சொன்னேன். இது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. நான் சொன்னதில் தவறு இருக்கலாம். இருப்பினும் மத்திய அரசு வழங்கும் மானியம் ரூ.5 என்பதை யாராலும் மறுக்க முடியாது.   தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் மனதில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலம் வரும்போது தங்கள் உணர்வுகளை வெளியிட அவர்கள் தவறுவதில்லை. இங்கே சிலர் பேசும்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. கூட்டணி தொடரும் என்று கூறினர். அப்போது தொண்டர்கள் கூட்டத்திலிருந்து திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற கோஷம் எழுந்தது. தொண்டர்களின் உணர்வுகளை தமிழக தலைவர்கள் புரிந்துகொண்டு அதை மேலிடத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.  
கருத்துக்கள்

ஆனால், மக்கள் காங்கிரசே வேண்டா என்று சொலகிறார்களே! செவியில் விழவில்லையா? தேவி குளம், பீர்மேடு, திருப்பதி, சித்தூர், கோலார் என எண்ணற்றத் தமிழ்ப் பகுதிகளைத் தாரை வார்த்த, தமிழினத்தைக் கொன்றொழிக்கும் காங்கிரசு மறையும் நாளே தமிழகம் மலரும் நாள் என உலகத் தமிழர்கள் சொல்லி வருவது தெரிந்தும் அதனை மறைப்பதேன்? காங். இல்லா ஆட்சியைத் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் அமைப்போம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/1/2010 3:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
you Right Mr ILAKKUVANAR Thiruvalluvan He Helping Taleeth Means Thantai Pariyan Not Come Congress so Number 1 Usless Party Congress No need to tamil Nadu this Usless party by Tamilan
 
தமிழகத்தில் காங்கிரசை முதல் நிலை இயக்கமாக்குவோம்' : மதுரையில் கக்கன் விழாவில் வாசன் பேச்சுv

ஞாயிறு, 21 மார்ச், 2010

பெ ண் ணா கரம் இடை த் தே ர் தல்


தருமபுரி, மார்ச் 20: மக்கள் மீது நம்பிக்கை இன்றி இடைத் தேர்தல்களை புறக்கணித்த அதிமுகவை பென்னாகரம் இடைத்தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார்.பென்னாகரம் சட்டப் பேரவை தொகுதி திமுக வேட்பாளர் பி.என்.பி. இன்பசேகரனுக்கு ஆதரவு திரட்டி, பாப்பாரப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:மக்கள் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையில்லாத அதிமுக கடந்த இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இப்போது பென்னாகரம் வாக்காளர்களை குழப்பவே அதிமுக போட்டியிடுகிறது.2011 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட முன்னோட்ட தேர்தலாக அதிமுக பென்னாகரம் இடைத் தேர்தலில் களம் இறங்கியுள்ளது.வரலாற்று சிறப்புமிக்க தமிழகத்தின் புதிய சட்டப் பேரவையில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்ததும், கூட்டத்தை புறக்கணித்து சென்றதும் மக்கள் மீது அக்கட்சி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகிறது என்பதை புலப்படுத்தியுள்ளது.மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்கும். தமிழகம் நாட்டில் முதல் நிலை மாநிலமாக உயர்ந்து வருகிறது.பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவாவிற்கு மணி மண்டபம் கட்டியதன் மூலம் காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் திமுக நீங்காத இடத்தை பெற்றுள்ளது என்றார்.
கருத்துக்கள்

எல்லாக் கட்சியையும் மக்கள் புறக்கணிக்கும் நாள் விரைவில் வரவேண்டும். காங்கிரசுக் கடசி இந்தியாவில் இருந்து மறையும் நாளே மனித நேயம் மலரும் நாளாகும்.ஊழல்களைப் பெருமளவில் பெருக்கியதற்குக் காரணமான காங்கிரசு இந்திய நிலத்தில் ஒரு பகுதியை அயல்நாட்வர்க்குத் தாரை வார்த்த காங்கிரசு அயலக மண்ணில் இனப்படுகொலை புரிந்த காங்கிரசு கட்சி நலனுக்காக நாட்டு மக்களையே கொன்றொழித்த காங்கிரசு விரட்டியடிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. மக்களுக்காக மக்களே ஆளும் உண்மையான மக்களாட்சி ஊழலும் ஒழுக்கக் கேடும் இல்லாத உண்மையான மக்களாட்சி விரைவில மலர நாம் முயல வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/21/2010 3:06:00 AM

நீங்க உரக்கப் பேசியதால் தி மு க வுக்கு ஒரு single ஒட்டு கூடுதலா கிடைக்க போறதில்லை!....ஏழை இந்தியனின் வரிப் பணம் பாழ் !!! கோயிலுக்கு சாமி கும்பிட வந்த ஆளுமாதிரி தெரியல ....எதோ கூட்டத்தோட வந்து சுண்டக்கடல வாங்கி தின்னுட்டுப் போற ஆளு மாதிரி தெரியுது !!!!

By rajasji
3/21/2010 2:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

செவ்வாய், 27 அக்டோபர், 2009

கப்பல் துறை மீது ஜி.கே வாசன் பாராமுகம்?



நமது நிருபர்திருவொற்றியூர், அக். 26: கப்பல்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் பதவி ஏற்றதிலிருந்து துறை ரீதியாக எவ்வித ஈடுபாடும் இன்றி இருப்பதாக பல்வேறு தரப்பிலும் தெரிவிக்கின்றனர். கப்பல்துறை மத்திய அரசின் முக்கிய துறைகளில் ஒன்றாகவும், கோடிக் கணக்கில் "பணம்' புரளும் துறையாகவும் இருப்பதால் இத்துறைக்கு அமைச்சராக வர கட்சிகளிடையே போட்டி இருந்து வந்தன. 2004-ல் டி.ஆர்.பாலுவுக்கு கப்பல்துறை ஒதுக்கப்படவில்லை என்பதற்காக ஒட்டுமொத்தமாக மத்திய அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என திமுக தலைமை அறிவித்தது. பின்னர் இத்துறை தி.மு.க.வுக்கு அளிக்கப்பட்டது. இதற்கு தி.மு.க தரப்பில் பல காரணங்கள் கூறப்பட்டாலும் 'பணம்' கொழிக்கும் துறை என்பதால்தான் தி.மு.க பிடிவாதம் செய்தது என அரசியல் பார்வையாளர்கள் கூறினர். இதே போல் மே 2009-ல் மன்மோகன்சிங் அமைச்சரவையில் மீண்டும் கப்பல் துறையை திமுக கோரியது. ஆனால் காங்கிரஸ் விடாப்பிடியாக மறுத்துவிட்டது. பின்னர் கப்பல் துறை அமைச்சராக ஜி.கே.வாசன் நியமிக்கப்பட்டார். வாசன் இத்துறையைக் கேட்காவிட்டாலும் அவரின் முக்கியத்துவம் கருதி கப்பல்துறை அவருக்கு வழங்கப்பட்டதாக கருத்து எழுந்தது. இதில் வாசன் ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆதரவாளர்கள் ஏமாற்றம்: 7,517 கி.மீ தூரம் கடற்கரையைக் கொண்ட இந்தியாவில் மும்பை, கோல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை, தூத்துக்குடி, காண்ட்லா, மங்களூர், கொச்சி உள்ளிட்ட 12 பெரிய துறைமுகங்கள் கப்பல் துறையின் ஆளுகையில் உள்ளன. இந்திய கப்பல் கழகம், கடல்சார் பல்கலைக் கழகம், சேது சமுத்திர திட்ட கழகம், கப்பல் கட்டும் நிறுவனங்கள் என பத்துக்கும் மேற்பட்ட பொதுத் துறை நிறுவனங்களும் உள்ளன. இவைகளில் அறங்காவலர்களாக அல்லது உறுப்பினர்களாக தாங்கள் நியமிக்கப்படலாம் என வாசன் ஆதரவாளர்களிடையே எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஆனால் வாசன் பொறுப்பேற்று ஐந்து மாதங்கள் ஆகியும் இதுவரை ஒருவரையும் இதுபோன்ற பதவிகளில் நியமிக்கவில்லை. சென்னை துறைமுக டிரஸ்டிகளாக தி.மு.க.வைச் சேர்ந்த 8 பேர் உள்ளனர். இவர்களை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது. 'அதிகாரம்' மூலம் பெற்ற பல ஒப்பந்தங்களையும் வாசனால் ரத்து செய்யமுடியவில்லை என்கிறார் காங்கிரஸ் முக்கியப் பிரமுகர் ஒருவர். பாராமுகத்தில் வாசன்: அமைச்சராகப் பதவி ஏற்ற வாசன், கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு தலா ஒரு முறை சென்றுள்ளார். இது தவிர நாட்டின் எந்த ஒரு துறைமுகத்துக்கும் பதவி ஏற்றதிலிருந்து செல்லவில்லை. சென்னைத் துறைமுகத்துக்கு வருமாறு அழைத்தும் இதுவரை ஒருமுறைகூட வரவில்லை. எந்த ஒரு உயர் அதிகாரியும் வீட்டுக்கு வரக் கூடாது, துறைமுகப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட எவரும் தனது சொந்த வேலைக்கு உபயோகப்படுத்தக் கூடாது என வாசன் கூறிவிட்டாராம். துறைமுக வாகனங்கள், விருந்தினர் விடுதிகள் உள்ளிட்டவற்றையும் வாசன் உபயோகிப்பது இல்லை எனத் துறைமுக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் கப்பல் துறையில் தவறுகளைக் களைந்து, சீர்படுத்தி சிறந்த நிர்வாகத்தை இளைஞரான வாசன் தர வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாகும். பின்னணி காரணங்கள் இது குறித்து கப்பல் துறை வட்டாரம், அமைச்சர் ஆதரவாளர்களிடையே கிடைத்த தகவல்கள்: இந்தியாவின் மொத்த வெளிநாட்டு வணிகம் 95 சதவீதம் துறைமுகங்கள் மூலம்தான் நடைபெறுகிறுது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் துறையில் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்ற ஆர்வம் அமைச்சர் வாசனுக்கு முதலில் இருந்தது உண்மை. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும்பாலான துறைமுகங்களில் 'அதிகார மையங்கள்' செய்துள்ள பதவி நியமனங்கள், முறைகேடான ஒதுக்கீடுகள் என எங்கு பார்த்தாலும் 'கோடிகளாக'வே புரளுவதை பின்னர்தான் அவர் தெரிந்து கொண்டார். இதேபோல் சென்னைத் துறைமுக தலைவர் பதவியை நியமிப்பதில் பல்வேறு தரப்பினரிடையே ஏற்பட்ட போட்டியால் இப்பதவி இதுவரை நிரப்பப்படவில்லை. தனது தந்தை ஜி.கே.மூப்பனாரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த வாசன் எவ்வித புகாருக்கும் ஆளாகக்கூடாது, குடும்ப பாரம்பரியத்திற்கு பங்கம் ஏற்படக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார். ஆனால் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என புரையோடிப்போனது கப்பல் துறை. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் கப்பல்துறையைத் தந்துவிட்டு எளிய துறையைப் பெற்றுக்கொண்டு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்று கட்சியில் தனது செல்வாக்கினை தக்க வைத்துக்கொள்வதுதான் வாசனின் விருப்பம் என்று அவருக்கு நெருக்கமாக உள்ள சிலர் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

எந்த ஓர் உயர் அதிகாரியும் வீட்டுக்கு வரக் கூடாது, துறைமுகப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட எவரும் தனது சொந்த வேலைக்கு உபயோகப்படுத்தக் கூடாது என வாசன் கூறிவிட்டாராம். துறைமுக வாகனங்கள், விருந்தினர் விடுதிகள் உள்ளிட்டவற்றையும் வாசன் உபயோகிப்பது இல்லை எனத் துறைமுக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்;எனக் குறிக்கப்பட்டுள்ளது. இது உண்மையெனில் வாசனைப் பாராட்டுவோம். மேலும் ஒரு துறை பணம் கொழிக்கும் துறையா இலலையா என்பது பொறுப்பில் உள்ளவர்களின் செயல்பாட்டைப் பொறுத்ததே என்னும் உண்மையை இச் செய்தி உணர்த்துகின்றது. கல்லில் நார் உரிப்பவர்கள் எத்துறை யிலும் பணத்தைக் கறந்துவிடுவர். அவ்வாறு இல்லாமல் ஒதுங்கிப் போகும் வாசனைப் பாராட்டுவோம். ஆனால், தமிழர் நலனில் ஒதுங்கிப் போகும் போக்கைக் கைவிட வேண்டும். ஈழத் தமிழர்கள் விடியலைக் காண உதவ வேண்டும். ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு உடந்தையாய் இருப்பதும் ஊழல்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓங்குக நேர்மை! வெல்க தமிழ் ஈழம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2009 5:27:00 AM

என்ன கொடும சார் இது, இந்த மாதிரி தண்ட தீவட்டிகளுக்கெல்லாம் மத்திய அமைச்சர் பதவி.

By Giridharan
10/27/2009 2:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *