சென்னை, ஆக.1: மின்வாரியத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரிகட்டும் வகையில், தாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:மின் பகிர்மானத்தில் ஏற்படும் மின் இழப்பைக் குறைத்தல், புதிய மின் திட்டங்களை விரைந்து நிறைவேற்றி மின் உற்பத்தியைப் பெருக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் மின் கட்டண உயர்வைத் தவிர்த்திருக்க முடியும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கைகளால் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை குறைத்திருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட வேறு சில கட்சியினரும் வெளியிட்டுள்ளனர்.தமிழக அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்ட காரணத்தினால்தான், கடந்த 4 ஆண்டு காலமாக மின் கட்டண உயர்வினை தவிர்த்து வந்தது. முதல் நாள் இரவு அறிவித்து மறுநாள் காலையில் மின் உற்பத்தியைத் தொடங்கிவிட முடியாது. மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான முயற்சிகளில் இந்த அரசு ஈடுபட்டு வருவதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.அனைத்துத் தரப்பினரையும் இந்த மின் கட்டண உயர்வு பாதிக்கும் என்று சிலர் தெரிவித்துள்ளனர். அது தவறான தகவல் ஆகும். தமிழகத்தில் வீடுகளில் மின்சாரம் உபயோகிப்போரின் எண்ணிக்கை 1 கோடியே 37 லட்சம் ஆகும்.இவர்களில் இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கும் அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 21 ஆயிரம் ஆகும். இவர்களுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.அதாவது, மூன்று சதவீதத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் வீடுகளில் ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்ற நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துவோர் ஆகும்.குடிசைவாசிகளுக்கு மின் கட்டணம் கிடையாதுகுடிசைகளுக்கு மின் கட்டணம் பத்து ரூபாய் என்று செய்தி வந்துள்ளது. இது சரியல்ல. இந்தப் பத்து ரூபாய் கட்டணத்தையும் மின்வாரியத்துக்கு தமிழக அரசு தந்துவிடுகிறது. அதனால், அனைத்துக் குடிசைவாசிகளுக்கும் மின் கட்டணமே கிடையாது என்பதுதான் உண்மை. இத்தகைய குடிசைவாசிகள் தமிழகத்தில் 11 லட்சத்து 98 ஆயிரம் பேர் ஆவர்.மின் பகிர்மான இழப்பை சரிகட்ட முயற்சிமின் பகிர்மானத்தில் ஏற்படும் இழப்பு தமிழகத்தில் 18.9 சதவீதமாக உயர்ந்துவிட்டது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே தில்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் மின் பகிர்மானத்தில் குறைந்த அளவு மின் இழப்பு ஏற்படுவதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. இந்த மின் இழப்பைக் கூட சரிக்கட்டுவதற்காக தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.உயர்வு ஏன்?கடந்த 4 ஆண்டுகளில் மின் கட்டணத்தையோ, பஸ் கட்டணத்தையோ தமிழக அரசு உயர்த்தவில்லை. மின்வாரியத்துக்கு மிக அதிக இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில். தமிழக அரசு அதற்கு மானியங்களை வழங்கி வருகிறது. தற்போதுள்ள நிலைமையை ஓரளவுக்கு சரிகட்டும் வகையிலேயே, தாங்கக் கூடியவர்களுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இதிலே கூட ஒழுங்குமுறை ஆணையம் இரு மாதங்களுக்கு 200 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. அவர்களிடம் 600 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு எந்தக் கட்டண உயர்வும் செய்யப்பட வேண்டியதில்லை என்று கேட்டுக்கொண்டேன்.தமிழ்நாட்டில் யூனிட் ஒன்றுக்கு ரூ.2.85 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவானது என்று தெரிவிக்கிறார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/2/2010 2:52:00 AM
8/2/2010 2:52:00 AM
By Ilakkuvanar Thiruvalluvan
8/2/2010 2:51:00 AM
8/2/2010 2:51:00 AM
By Nagan Srinivasan
8/2/2010 2:34:00 AM
8/2/2010 2:34:00 AM
By Annaththambi
8/2/2010 1:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *தினமலர் 8/2/2010 1:24:00 AM