சனி, 7 ஆகஸ்ட், 2010

வதந்திகளை நம்பவேண்டாம்: மு.க. அழகிரி அறிக்கை


மதுரை, ஆக. 6: இட்டுகட்டி எழுதப்படும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.இது தொடர்பாக மத்திய அமைச்சரும், தென்மண்டல திமுக அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:ஒரு சில வாரப்பத்திரிகைகள் தொடர்ந்து இட்டுகட்டி, நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடுநிலை பத்திரிகைகள் என்ற பெயரில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த கழக பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணியினர் மீது அவதூறான, ஆதாரமில்லாத செய்திகளை வெளியிட்டு வருகின்றன.இவ்வாறு அவதூறாக செய்தி வெளியிடும் பத்திரிகைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே, இதுபோன்ற அவதூறான, வதந்திகளைப் பரப்பும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துக்கள்

என்ன புரளி என்றே யாருக்கும் தெரியாத சூழலில் இந்தச் செய்தி எதற்கு? அல்லது புரளி என்னவென்றாவது குறிப்பிட வேண்டும். ஒருவேளை அவர்கள் கட்சி மாறுவதாகக் குறிப்பிடுவதைக் குறித்த செய்தியாக இருக்கலாம் எனில் அரசியலில் இதுவெல்லாம் இயற்கைதானே!அதிமுகவினர் கட்சி மாறுவதாக வந்த செய்திகள் உண்மையாயின போல் இப்புரளிகளும் உண்மையாக இருக்கலாம் அல்லவா? இப்படி யெல்லாம் எண்ணாமல் இருக்க வீண் குழப்பம் தரும் செய்தி எதற்கு? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/7/2010 4:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக