tamil people லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil people லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 டிசம்பர், 2013

SL minister Badurdeen splits Tamil speaking people

SL minister Badurdeen splits Tamil speaking people in Mannaar

[TamilNet, Thursday, 12 December 2013, 12:05 GMT]
Attempting to incite community hatred between various Tamil-speaking communities of Naanaaddaan, Rishard Badurdeen, the Industry and Commerce Minister of the occupying Sri Lanka, has again interfered in the civic affairs, sabotaging the efforts by the Bishop of Mannaar to resolve a land dispute in Pon-theevu-ka’ndal village, news sources in Mannaar said. The SL minister has played a crucial role in creating a conflict between the residents of the Muslim village of Poovarasang-ku’lam and Pon-theevu-ka’ndal where non-Muslim Tamils live. The SL Police and government officials are under the control of the controversial minister, who has been behind causing unrest between Catholics and Muslims in the district.

Last year, when Badurdeen incited violence and went on record in SL parliament issuing a threatening statement against the Bishop of Mannaar, there were widespread protests against him in the North.

Recently, the Divisional Secretary of Naanaaddaan, who was allegedly under the influence of Mr Badurdeen, went ahead with a plan to distribute lands to Muslims and non-Muslims in Pon-theevu-ka’ndal village. As some Muslim villagers from the nearby Poovarasang-ku’lam started to construct houses in Pon-theevu-ka’ndal on Monday, the villagers objected to the move.

Following the episode, a meeting was held at Naanaaddaan Divisional Secretariat. When the divisional secretary was taking the side of SL minister Badurdeen, the protesting villagers of Pon-theevu-ka’ndal attacked the secretariat causing damage to the secretariat. The officials of the secretariat went on a protest, and the SL minister reportedly instructed the DS officials in Musali and Mannaar to join the boycott against the attack on Naanaaddaan divisional secretariat.

Sri Lankan police arrested 65 villagers of Pon-theevu-ka’ndal, including women, on charges of attack against the Naanaaddaan secretariat. The arrested were sent to Anuradhapura remand prison. On Wednesday, the District Court of Mannaar ordered 18 of these to be detained till 18th December and granted bail to the remaining 47 on a surety of Rs 25,000 each.

In the meantime, when Mannaar Bishop and the Catholic priests wanted the SL Government Agent M.Y.S. Deshapriya, to resolve the conflict, the SLGA, who is behind the Sinhalicisation of Mannaar, has told them that the people concerned should resolve the dispute at the Divisional Secretariat in Naanaaddaan.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

லிபியா நாட்டில் தவித்த தமிழர்கள்: அமைச்சர் அழகிரி முயற்சியால் மீட்பு


மதுரை, அக்.23: லிபியா நாட்டுக்கு வேலைக்குச் சென்று சம்பளம் மற்றும் உணவு இல்லாமல் தவித்த தமிழர்கள், மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரியின் முயற்சியால் மீட்கப்பட்டனர்.   இது குறித்து மதுரையில் மத்திய அமைச்சரின் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து கட்டுமானப் பணிகளுக்காக 80-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சில ஆண்டுகளுக்கு முன் லிபியா சென்றனர். அங்குள்ள நிறுவனம் தமிழகத் தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் உணவு சரிவர வழங்காமல் இருந்துள்ளன.     இதுகுறித்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து லிபியாவில் உள்ள இந்திய தூதரகத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தொடர்புகொண்டு தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.    துரிதமாக செயல்பட்ட இந்திய தூதரகம், முதற்கட்டமாக 40 தமிழர்களை மீட்டது.  மீட்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் விரைவில் இந்தியா வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

நல்ல முயற்சிக்குப் பாராட்டுகள். இதுபோல் புலம் பெயர்ந்த தமிழர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதில் இருந்தும் அயல்நாடுகளில் தடுத்து வைக்கப்படுவதில் இருந்தும் மீட்க வேண்டும். அயல்வாழ் தமிழர் நலன் என ஒரு துறையை உருவாக்கி அழகிரியின் பொறுப்பில்
விடவேண்டும். இதற்கான கோரிக்கை வைத்து அவர் வெற்றி பெற வேண்டும்.
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 2:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மறு பதிவு: நல்ல முயற்சிக்குப் பாராட்டுகள். இதுபோல் புலம் பெயர்ந்த தமிழர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதில் இருந்தும் அயல்நாடுகளில் தடுத்து வைக்கப்படுவதில் இருந்தும் மீட்க வேண்டும். அயல்வாழ் தமிழர் நலன் என ஒரு துறையை உருவாக்கி அழகிரியின் பொறுப்பில் விடவேண்டும். இதற்கான கோரிக்கை வைத்து அவர் வெற்றி பெற வேண்டும். By Ilakkuvanar Thiruvalluvan 10/24/2010 2:45:00 AM எஞ்சிய தமிழர்களையும் உடனே மீட்க வேண்டும். அயல்வாழ் அமைச்சுத்துறை குறித்து வீரமணியார் பேசிய பேச்சு வேறு பக்கத்தில் வந்துள்ளது. அவ்வாறிருக்க இச்செய்தியை நீக்கியது முறைதானா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 3:20:00 PM
REAL TAMILAN
By hussain
10/24/2010 2:02:00 PM

புதன், 15 செப்டம்பர், 2010

மீனவர் பிரச்னை: ஜப்பான் தூதருக்கு சீனா சம்மன்


பீஜிங், செப்.15- மீனவரை விடுவிப்பது தொடர்பான பிரச்னையில் விளக்கம் கேட்பதற்காக ஜப்பான் தூதருக்கு சீனா 5-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
இருநாடுகளின் இடையே சர்ச்சைக்குரிய கடல் பகுதியில், ஜப்பான் படகுகள் மீது மோதியதாக சீன மீன்பிடி படகு ஒன்றின் கேப்டனை  ஜப்பான் கைது செய்துள்ளது.
இது சட்டவிரோதமான கைது என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் லீ ஸென்மின் நேற்று ஜப்பான் தூதர் உச்சிரோ நிவாவை நேரில் வரவழைத்து புகார் கூறினார். மீனவரை உடனே விடுதலை செய்து சீனாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், மீண்டும் ஜப்பான் தூதரிடம் விளக்கம் கேட்பதற்காக 5வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்

சீனா இறை யாண்மை உள்ள நாடு. எனவே தன் நாட்டு மீனவரிடம் தவறு இருந்தாலும் காப்பாற்றுகிறது. இந்திய இறையாண்மையோ சிங்களத்திடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கில் மடிந்தாலும் சிங்களம் பக்கமே நிற்கிறது. தமிழ் மக்களுக்கு மட்டும் உரிமையில்லை என்ற எண்ண வேண்டா. இந்திய அரசும் அடிமை அரசாகத்தான் உள்ளது. எனினும் தமிழர்களைக் காவு கொடுத்துக் குளிர் காய்கிறது. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/15/2010 5:09:00 PM
Now the Indian Government and State Government shall think deeply on harrassment and death of fisherman in coastel area of southern part of India by Srilanka navy. We can not become developed country until unless ensure of safety of citizen of India in homeland and abroad. All Eropian and American states are very careful and strict on safety on their citizen except India.
By Karthick
9/15/2010 5:05:00 PM
Chaina u ku avan makkal mukkiyam. So INdianuku no problem
By jass
9/15/2010 4:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

தொண்டர்களின் உணர்வுகளை மேலிடத்தில் தெரிவிக்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


மதுரை, ஜூலை 31: தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்களின் உணர்வுகளை காங்கிரஸ் மேலிடத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தினார். திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருவதை தொண்டர்கள் விரும்பவில்லை என்று அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.  மதுரையில் தியாக சீலர் கக்கன் நூற்றாண்டு நிறைவு விழா மருத்துவக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:  தமிழ்நாட்டில் 1967-ம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரமுடியாமல் போய்விட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், சாதனைகளையும் நாம் மக்களிடம் சரிவர எடுத்துக் கூறாததே காரணம். காங்கிரஸ் பேரியக்கத்தை கக்கன் போன்ற பெரிய தலைவர்கள் வளர்த்து வந்த போதிலும் நாம் நமது கடமையை சரிவரச் செய்யாமல் இருந்ததால்தான் 42 ஆண்டுகளாக நாம் ஆட்சியை இழந்து நிற்கிறோம்.  பொதுவாழ்வில் தூய்மையையும் நேர்மையையும் கடைபிடித்து தன்னிகரில்லாத தலைவராக வாழ்ந்தவர் தியாகி கக்கன். அவர் வளர்த்த கட்சியில் நாம் இருப்பது நமக்குத்தான் பெருமை.   தமிழ்நாட்டில், மக்களுக்கு ஒளிகொடுப்பவர்கள் தாங்கள்தான் என்பது போல திமுகவினர் பேசி வருகின்றனர். தங்களைச் சூரியனாகவும், காங்கிரûஸ சந்திரனாகவும் வர்ணிக்கின்றனர். நாங்கள் சந்திரன்தான். ஆனால், வித்தியாசமான சந்திரன். நாங்கள் அவர்களுடன் இருந்தாலும் அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகிறோம்.     மத்திய அரசு வழங்கும் மானியத்தில்தால் தமிழக அரசு கிலோ ஒரு ரூபாய் அரிசி திட்டத்தை ரேஷனில் செயல்படுத்தி வருகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.7 மானியமாகத் தருகிறது என்று நான் சொன்னேன். இது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. நான் சொன்னதில் தவறு இருக்கலாம். இருப்பினும் மத்திய அரசு வழங்கும் மானியம் ரூ.5 என்பதை யாராலும் மறுக்க முடியாது.   தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் மனதில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலம் வரும்போது தங்கள் உணர்வுகளை வெளியிட அவர்கள் தவறுவதில்லை. இங்கே சிலர் பேசும்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. கூட்டணி தொடரும் என்று கூறினர். அப்போது தொண்டர்கள் கூட்டத்திலிருந்து திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற கோஷம் எழுந்தது. தொண்டர்களின் உணர்வுகளை தமிழக தலைவர்கள் புரிந்துகொண்டு அதை மேலிடத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.  
கருத்துக்கள்

ஆனால், மக்கள் காங்கிரசே வேண்டா என்று சொலகிறார்களே! செவியில் விழவில்லையா? தேவி குளம், பீர்மேடு, திருப்பதி, சித்தூர், கோலார் என எண்ணற்றத் தமிழ்ப் பகுதிகளைத் தாரை வார்த்த, தமிழினத்தைக் கொன்றொழிக்கும் காங்கிரசு மறையும் நாளே தமிழகம் மலரும் நாள் என உலகத் தமிழர்கள் சொல்லி வருவது தெரிந்தும் அதனை மறைப்பதேன்? காங். இல்லா ஆட்சியைத் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் அமைப்போம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/1/2010 3:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
you Right Mr ILAKKUVANAR Thiruvalluvan He Helping Taleeth Means Thantai Pariyan Not Come Congress so Number 1 Usless Party Congress No need to tamil Nadu this Usless party by Tamilan
 
தமிழகத்தில் காங்கிரசை முதல் நிலை இயக்கமாக்குவோம்' : மதுரையில் கக்கன் விழாவில் வாசன் பேச்சுv

செவ்வாய், 18 மே, 2010

மலேசியத் தமிழர்களுக்கு இந்தியா உதவவில்லை: மலேசிய பினாங்கு மாநில துணை முதல்வர் பேட்டி

மதுரை, ​​ மே 17:​ மலேசியத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் இந்திய அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை என்று மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் ப.ராமசாமி கூறினார்.​ ​ மதுரையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது:​ ​ நாம் தமிழர் இயக்க அரசியல் மாநாட்டில் கலந்து கொள்ள மதுரை வந்துள்ளேன்.​ ​தமிழர்களுக்கு எழுச்சி மற்றும் முற்போக்குச் சிந்தனை வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.​ தமிழர்கள் இலங்கை மட்டுமின்றி சிங்கப்பூர்,மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.​ அதனால்,​​ நமக்குள் ஒரு ஒற்றுமை வேண்டும்.​ நல்ல சிந்தனை வேண்டும்.​ ​ அண்மையில் இலங்கைத் தமிழ் அகதிகள் 75 பேர் மலேசியக் கடல் போலீஸôரால் கைது செய்யப்பட்டு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.​ அவர்களைத் திரும்பவும் இலங்கைக்கு அனுப்பினால் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்டுவிடும் வாய்ப்பு உள்ளது.​ இதனால் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்று மலேசிய போலீஸôர் மற்றும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.​ ​ தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு உள்ள பாதுகாப்பு வசதி போன்று மற்ற நாடுகளில் இல்லை.​ அதற்குக் காரணம்,​​ இங்கு தமிழர்கள் இருப்பதுதான்.​ ​​ ​ செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பாக ஆரம்பத்தில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.​ அண்மையில் தில்லியில் நடைபெற்ற புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கான மாநாட்டிலும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.​ ​ ஆனால்,​​ இலங்கைத் தமிழர்களை இந்திய அரசும்,​​ தமிழக அரசும் காப்பாற்றவில்லை.​ அந்த ஒரே காரணத்திற்காக இந்த இரு மாநாடுகளிலும் நான் கலந்து கொள்வதில்லை என நிராகரித்துவிட்டேன்.​ ​ மலேசியா,​​ சிங்கப்பூர்,​​ மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் பொருளாதார,​​ சமூக,​​ அரசியல் ரீதியாக மோசமான நிலையில் உள்ளனர்.​ மலேசியாவில் தமிழர்களுக்குப் பொருளாதாரப் பங்கு பெரிய அளவில் இல்லை.​ மலேசியாவில் 140 ஆண்டுகளாகவே மலைத் தோட்டத் தொழிலாளர்கள் என்ற வட்டத்திற்குள்ளே வைத்து தமிழர்கள் பார்க்கப்பட்டுள்ளனர்.​ தற்போதுதான் அவர்கள் வெளியேவரத் தொடங்கி உள்ளனர்.​ ​ இந்திய அரசு மலேசியத் தமிழர்களுக்கு எந்தவித உதவியையும் செய்யவில்லை.​ ஆனால்,​​ இந்தியாவின் விடுதலைக்கு மலேசியத் தமிழர்கள் மிகவும் உறுதுணையாக இருந்துள்ளனர்.​ ​ 20 ஆண்டுகளாக எங்கள் பிரச்னையில் இந்திய அரசு உதவிடும் என்று எதிர்பார்த்தோம்.​ ஆனால்,​​ எங்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை.​ குறிப்பாக ஈழப்போருக்குப் பின் இந்திய அரசு தமிழர்களுக்கு உதவாது என்பது உறுதியாகிவிட்டது என்றார் அவர்.​ ​ பேட்டியின்போது நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான்,​​ பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துக்கள்

நல்ல தமிழ் உணர்வாளர் துணை முதல்வர் இராமசாமி உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் உலக அரசுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியிலும் இறங்கி வெற்றி காண வேண்டும்.

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/18/2010 3:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *