வியாழன், 5 ஆகஸ்ட், 2010

முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி


புதுதில்லி, அக. 5: மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி முதல்முறையாக நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பதிலளித்தார்.கேள்வி நேரத்தின்போது பிரதான கேள்வி ஒன்றுக்கு, முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பதிலை அவர் ஆங்கிலத்தில் வாசித்தார்.அவர் அமைச்சராக பதவியேற்று ஓராண்டுப் பின் இப்போதுதான் நாடாளுமன்றத்தில் பதிலளித்து உள்ளார்.பிரதான கேள்வியைத் தொடர்ந்து உறுப்பினர்கள் எழுப்பிய துணைக் கேள்விகளுக்கு   இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா பதிலளித்தார்."இன்றைய தினம் கேள்விப் பட்டியலில் எனது கேள்வி, முதலில் இடம் பெற்றதும் அமைச்சர் அழகிரி அதற்கு முதன்முதலில் பதிலளித்ததும் நான் செய்த பாக்கியமாகக் கருதுகிறேன்' என்று நெகிழ்ந்தார் காங்கிரஸ் உறுப்பினர் சரண் தாஸ் மகந்த்.அழகிரி கேபினட் அமைச்சராக இருந்தபோதும் நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். ஆங்கிலத்தில் சரளமாக பேச வராது, ஹிந்தி தெரியாது என்ற காரணத்தால் அவை நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவில்லை.கேள்வி நேரத்தில் கூட அவருக்குப் பதிலாக இணை அமைச்சசர் ஸ்ரீகாந்த் ஜேனாவே பதிலளித்து வந்தார்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. அமைச்சர் அழகிரிதான் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால் அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் தவிர்த்து வந்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர் அழகிரி அவைக்கு வருவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்பட  விமர்சித்தார்.அமெரிக்கா சென்றுள்ளதால் பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் பதிலளிக்க அனுமதிக்குமாறு மக்களவைத் தலைவர் மீராகுமாரிடம் அழகிரி அனுமதி கோரினார். ஆனால் நாடாளுமன்ற செயலகம் இதற்கு அனுமதி மறுத்துவிட்டது. விதிகளின்படி ஆங்கிலம் அல்லது ஹிந்தியில்தான் அமைச்சர்கள் பேச முடியும் என்று உறுதியாக தெரிவித்துவிட்டது.இந்த நிலையில் அவை நிகழ்வுகளில் கலந்து கொள்வது குறித்து அவைத் தலைவர் மீராகுமாரிடம் ஆலோசனை செய்தார் அழகிரி. எழுத்து மூலம் கேட்கப்படும் பிரதான கேள்விகளுக்கு அமைச்சர் அழகிரி ஏற்கெனவே ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட பதிலை அவையில் படிக்குமாறு யோசனை தெரிவிக்கப்பட்டது.அந்த யோசனையை ஏற்று முதன்முதலாக மக்களவையில் அமைச்சர் அழகிரி வியாழக்கிழமை பேசினார்.
கருத்துக்கள்

முதல் உரை தமிழ் உரையாக இல்லாத பொழுது இதை முன்பே வாசித்திருக்கலாமே. பொறுத்ததுதான் பொறுத்தார், தமிழில் பேசும்வரை பொறுத்திருக்கக் கூடாதா?அரசர் வீட்டுக் கன்றுக்குட்டியின் சிக்கலைத் தீர்க்கவாவது அரச மொழியாகத் தமிழ் வரும் என எதிர்பார்த்தோம். மாநிலத் தன்னாட்சி கோருவோரால் மொழியுரிமையைக்கூடப்பெற இயலவில்லையே என வரலாறு பழிக்காதா? பிற நாட்டுத்தலைவர்கள் சந்திக்கும் பொழுது தங்களுக்கு அயல்மொழி தெரிந்தும் தத்தம் தாய்மொழியில்தான் பேசுகின்றனர். இங்கோ தாய்மொழியை மறந்தால்தான் நாட்டுப்பற்று மிக்க தேசத்தலைவர்கள் என்ற பட்டம் கிட்டும் அவல நிலை. மத்திய அரசின் ஆட்சிமொழியாகத் தமிழை ஆக்கவதுடன் பாராளுமன்ற மொழியாக உடனடியாகத்தமிழை ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/6/2010 3:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மக்களவையில் அழகிரியின் முதல் பதில்


புதுதில்லி, ஆக. 5: மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி மக்களவையில் இன்று முதல் முறையாக ஒரு கேள்விக்குப் பதிலளித்தார்.மத்திய அமைச்சராக அழகிரி பதவியேற்றது முதல் இதுவரை நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்த நிலையில் மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் சரண் தாஸ் மஹந்த் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அழகிரி ஆங்கிலத்தில் பதிலளித்தார். "ஏ முதல் ஈ வரையிலான அறிக்கை அவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது" என்பதே அவர் அளித்த பதிலாகும்.இதைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட துணைக் கேள்விகளுக்கு அழகிரியின் அனுமதியோடு துணையமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா பதிலளித்தார்.
கருத்துக்கள்

முதல் உரை தமிழ் உரையாக இல்லாத பொழுது இதை முன்பே வாசித்திருக்கலாமே. பொறுத்ததுதான் பொறுத்தார், தமிழில் பேசும்வரை பொறுத்திருக்கக் கூடாதா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/5/2010 9:45:00 PM 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக