செவ்வாய், 6 ஜூலை, 2010

பொன்சேகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை: இலங்கை அமைச்சர்



கொழும்பு, ஜூலை 6- சரத் பொன்சேகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
"பாலியல் குற்றச்சாட்டில் ராணுவ இலட்சினை பறிக்கப்பட்டவர் பொன்சேகா. பின்னர், அவரது ஜாதகம் நன்றாக இருந்ததால் மீண்டும் பதவி கிடைத்தது. அவருக்கு தேவையானதை அதிபர் ராஜபட்ச பெற்றுக் கொடுத்தார். ஆனால், அவர் அதிபரை குற்றம்சாட்டுகிறார். எனவே, சரத் பொன்சேகாவை உயிருடன் புதைப்பதற்கான மயானத்தை அமைக்க வேண்டும். இத்தகைய மயானம் அமெரிக்காவில் ஏற்கெனவே உள்ளது." என்று அமைச்சர் மேர்வின் சில்வா பேசியதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

அதுதான் தண்டனை என்றால் உடன், பக்சே முதலான அனைத்துச் சிங்களத் தலைவர்களையும் படைத்தலைவர்களையும் கொலைவெறியில் தாண்டவமாடிய படைவீரர்களையும் உறுதுணை புரிந்த பன்னாட்டு அதிகாரிகள் தலைவர்களையும் புத்தர் கொள்கையைக் கொன்று புதைத்து வெறியாட்டம் ஆடும் போலிச்சாமியார்களையும் புதைக்க வேண்டும். அனைவரையும் தண்டிக்க வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/6/2010 4:03:00 PM
Buddha if he is alive he will ashamed about these Buddhists scoundrels of Lanka.
By Theravada
7/6/2010 3:39:00 PM
பொன்சேகாவிற்கு உயிருடன் புதைக்க மானம் தேவை என்றால்....சிங்கள நாய்களுக்கும்,அப்பாவி தமிழர்களை கொல்ல உதவி செய்தி " அத்தனை" பன்றிகளுக்கும் ...உயிருடன் கொல்லி தானடா போடவேண்டும்...அதுவும் சிக்கிரமே ...நடக்கும்
By Selva
7/6/2010 3:25:00 PM
அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மிக பொறுப்பு ஏற்று அன்றைய ரயில்வே மினிஸ்டர் லால்பகதூர் சாஸ்திரி தன் பதவியை துறந்தார் . அது போல் லட்சகணக்கான தமிழர்கள் சாகும் போது, முதல்வராக இருந்த கலைஞரை தார்மீக பொறுப்பு ஏற்று , பதவியை ராஜினாமா செய்ய சொலுங்கள் அம்மா அவர்களே .
By ....
7/6/2010 3:06:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக