வெள்ளி, 9 ஜூலை, 2010

இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்: வேதாரண்யம் மீனவர் சாவு

லங்கைக் கடற்படையினர் தாக்கியதால் பாதிக்கப்பட்ட வெள்ளப்பள்ளம் மீனவர்கள்
வேதாரண்யம், ஜூலை 8:  நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு தென் கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு மீனவர் உயிரிழந்தார்.வேதாரண்யத்தை அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்தவர் சி. செல்லப்பன் (55). இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தி. செல்வராசு (50), ஆ. காளியப்பன் (35), திருவன்புலம் (22).இவர்கள் 4 பேரும் புதன்கிழமை காலை கண்ணாடி இழைப் படகில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, புதன்கிழமை இரவு 9 மணி அளவில் இலங்கைக் கடற்படையினர் அந்தப் பகுதிக்கு வந்தனர்.20 பேராக வந்த இலங்கை கடற்படையினரில் 6 பேர் மட்டும் தமிழக மீனவர்களின் படகில் ஏறி, அனைவரையும் நிர்வாணப்படுத்தியதுடன், கல், தடித்த கயிறு உள்ளிட்டவற்றால் அனைவரையும் தாக்கினராம். இந்தத் தாக்குதலில் செல்லப்பன் படகிலேயே விழுந்து உயிரிழந்தார்.இதையடுத்து, மற்ற மூன்று பேரையும் இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்தனராம். செல்லப்பனின் சடலத்துடன் புறப்பட்ட மற்ற மீனவர்கள் வியாழக்கிழமை காலை கரை ஏறினர். தகவலறிந்து வந்த போலீஸôர், தனிப் பிரிவு போலீஸôர், உளவுத் துறையினர் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.உயிரிழந்த செல்லப்பனின் உடல் பிரேத பரிசோதனைக்காக, வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால், உடனடியாக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.மேலும் இரண்டு சம்பவங்கள்:இதேபோல, புதன்கிழமை இரவு மேலும் இரு இடங்களில் நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்த அ. முருகேசன் (30), செ. சின்னப்பன் (35), ஆ. இளையராஜா (18), அ. அறிவழகன் (24) ஆகியோர் வேதாரண்யத்திலிருந்து கிழக்குப் பகுதியில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களைத் தாக்கி, படகிலிருந்த ஐஸ் பெட்டி, வலைகள் ஆகியவற்றைச் சேதப்படுத்திவிட்டு, செல்போன், கை விளக்கு ஆகியவற்றை எடுத்துச் சென்றுவிட்டனராம்.இதேபோல, புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த தனபால் (22) உள்ளிட்ட 4 மீனவர்கள் மீதும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக வியாழக்கிழமை கரை திரும்பியபோது அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

கையாலாகாத தமிழ்நாடு; கண்டுகொள்ளாத இந்தியா என்னும் நிலையால் மீனவர்கள் அழிவதைத் தடுக்க மீனவர்கள் வாழும் பகுதியை மீனவர்நாடு அல்லது மீன்கொடி நாடு எனத் தனியாகப் பிரித்துக் கொடுத்தால் வாழ்ந்தாலும் வீழ்நதாலும் அவர்கள் பொறுப்பாகும். நம் மீது பழி வராது. இல்லையேல் தொடர் கொலைக்கு முற்றுப்புள்ளி வராது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2010 6:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக