புதன், 7 ஜூலை, 2010

பன்னாட்டு அவையானது கைக்கூலிகளின் கூட்டம் போன்றும் அடியாட்களின் கூடாரம் போன்றும் செயல்படக்கூடாது. தமிழினப் படுகொலைகளுக்கு ஒரு வகையில்  காரணமான ஐ.நா.  சிங்களத்திற்கு நற்சான்றிதழ் தரும் இவ்வறிக்கையிலேயே  சிங்களத்தில் அரங்கேறும் கடுவன்கொடுமைகள் சட்டிக் காட்டப்படுகின்றன என்னும் பொழுது உண்மையிலேயே நடுநிலையுடன்  அறிக்கை அளித்தால் எத்தகைய உண்மைகள் வெளிவரும் என்பதை  எண்ணுக. தமிழர்களின் தாயகம் அமையும் வரை அயலகங்களை நாடி வரும்  ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் புலம்பெயர் குடிமக்கள் உரிமை வழங்கப்பெற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக