சென்னை, ஜூலை 8: இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு தமிழக மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடுமை புரிவதென்பது இது முதல் முறையல்ல. தொடர்ந்து நடைபெறும் தொடர்கதையாக உள்ளது.தமிழக மீனவர்களின் இந்தத் துயர நிலை குறித்து, தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும், தொடர்புடைய அமைச்சர்களுக்கும் இதுவரை பல முறை நேரிலும், கடிதங்கள் மூலமும் கோரிக்கைகள் விடுத்தும் தமிழக மீனவர்களின் அவலம் நின்றபாடில்லை.கண்டிக்கத்தக்கது: தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை சித்திரவதைக்கும், கொலைக்கும் ஆளாகும்போது மத்திய அரசிடம் நாம் முறையிடுவதும், அவர்களும் நம்மைச் சமாதானப்படுத்துகின்ற முயற்சியிலே ஒரு கடிதமோ, வேண்டுகோளோ இலங்கை அரசுக்கும் விடுப்பதும், அதற்குப் பிறகு சில நாள்களில் இப்படிப்பட்ட கொடுமை நடைபெறுவதும் வாடிக்கையாகிவிட்டது. மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். இந்திய-இலங்கை அரசுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்று ஒப்பந்தம் போடப்பட்ட நேரத்திலே கூட, தமிழக மீனவர்களின் இந்த நிலை குறித்து விரிவாகப் பேசப்பட்டு தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தால் கூட, அவர்களை தாக்குவதோ, கொலை செய்வதோ கூடாது என்றும், முறைப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர இதுபோன்ற செயல்களில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபடக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டது.ஆனால், அதற்கு மாறாக தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் இக் கொடுமையைக் களைய மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிகழ்ச்சி பற்றிய உண்மை விவரத்தை தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தியாக வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.திமுக நாளை ஆர்ப்பாட்டம்சென்னை, ஜூலை 8: தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, சென்னையில் திமுக சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.அந்தக் கட்சியின் மீனவர் அணி அறிவித்துள்ள இந்த ஆர்ப்பாட்டம், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்பு நடத்தப்படுகிறது.இத் தகவலை திமுக மீனவர் அணிச் செயலாளர் ஆர்.பெர்னார்டு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார். மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டிப்பதோடு, மத்திய அரசு இனியாவது துரித நடவடிக்கைகளை கடுமையாக எடுத்து மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இந்தப் போராட்டத்தில் தமிழக மீனவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.மீனவர் செல்லப்பன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதிஇலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான தமிழக மீனவர் செல்லப்பனின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.இந்த நிதி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மூலமாக உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2010 6:36:00 AM
7/9/2010 6:36:00 AM
By Rajakumar, Singpaore
7/9/2010 6:35:00 AM
7/9/2010 6:35:00 AM
By Musthafa
7/9/2010 5:30:00 AM
7/9/2010 5:30:00 AM
By Dharumi
7/9/2010 5:10:00 AM
7/9/2010 5:10:00 AM
By ravi
7/9/2010 4:57:00 AM
7/9/2010 4:57:00 AM
By Musthafa
7/9/2010 4:49:00 AM
7/9/2010 4:49:00 AM
By navin guru
7/9/2010 3:56:00 AM
7/9/2010 3:56:00 AM
By மதுரைக்காரன்
7/9/2010 3:44:00 AM
7/9/2010 3:44:00 AM
By manikandan
7/9/2010 2:53:00 AM
7/9/2010 2:53:00 AM
By KOOPU
7/9/2010 1:40:00 AM
7/9/2010 1:40:00 AM
By ஐஸ்கட்டி
7/9/2010 1:32:00 AM
7/9/2010 1:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *