செவ்வாய், 6 ஜூலை, 2010

பகவத்கீதை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது. பல் வ‌ே று காலங்களில் இடை இடைய‌ே ச‌ே ர்க்கப்பட்டது. எனவே, அதனை கி.மு.வில சேர்க்க வேண்டா.
பகவத்கீதையை முழுமையாகப்படிக்காமலேய‌ே தவறான உயர்வான கற்பிதங்கள் உலா வருகின்றன.
சான்றாக ஒன்று:  கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே ! இவ்வரியை மட்டும் வைத்துக்  கொ ண்டு இதனை ப் புகழ்வோர் கணக்கிலடங்கார்.  உண்மை யில் இவ் வரி வருக்க வே றுபாட்டை வலியுறுத்துவதாகும். ஏனெனில் அடுத்த வரி அவரவர், அவரவர் சாதிக்குரிய கடமையைத்தான் செய்ய வேண்டும். உயர்சாதிக்குரிய  கடமையைச் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என எண்ணி அதற்காகக் கீழ்ச்சாதிக்காரர்கள் அக்கடமையைச் செய்தால் புண்ணியம் கிடைக்காது. மாறாக சாதிக்குரிய பயன் என்ன என்று ஆராயாமல் கடமையைச் செய்ய வேண்டும் என்கிறது. இன்றைக்கும் பல இடங்களில் சான்றாகச் சீர்காழி யில் அடுக்களையில் தம் சமையலைச் சரியாகச் செய்யும் சமையலர்களுக்கு அவர்கள் யாருக்காகச்  சமைக்கிறார்களோ அவர்கள் தெய்வத் திருவுருவைத் தீண்டினால் அடையும் புண்ணியத்தில் பாதி கிடைக்கும் எனப் பொருள்படும்படி எழுதி வைத்து இருக்கிறார்கள். சாதிக்குரிய  அடிமைத்தனக் கடமையைச் செய்தாலே  நற்பேறு கிடைக்கும் என்பதை   வலியுறுத்துகிறது. இதைத்தான்  கீதை சொல்கிறது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக