சென்னை, ஜூலை 6: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதா என்று முதல்வர் கருணாநிதிக்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கருணாநிதியும் போர் குற்றவாளிதான் என்று குற்றஞ்சாட்டி நான் வெளியிட்ட அறிக்கையை கண்டித்து முதல்வர் கருணாநிதி எதிர்த்தாக்குதல் தொடுத்திருப்பதை வரவேற்கிறேன். கருணாநிதியின் இந்த அறிக்கை உண்மையை மூடி மறைப்பதாக உள்ளது.ராஜீவ்காந்தி கொலை வழக்குத் தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து, என் மீது கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார். இதில் எனக்கு எவ்வித வியப்பும் இல்லை. ராஜீவ்காந்தி கொலையாளிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையால் கருணாநிதி அடைந்த ஆத்திரம், இன்று வரை அடங்கவில்லை. இதை தனது அறிக்கையின் மூலம் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டார். இதிலிருந்தாவது தங்களது கூட்டணிக் கட்சித் தலைவரின் உண்மையான மனப்பான்மையை காங்கிரஸ் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். போர் நடக்கும்போது பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது என்று நான் கூறியது உண்மைதான். எல்லாப் போரிலும் இதுதான் நடைபெற்றது. ஆனால், போர் முடிந்து விட்டது என்று கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட பின், தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதையும், நான் கூறியதையும் ஒப்பிட்டுப் பேசுகிறார் கருணாநிதி. இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களை கொன்றுக் குவித்ததை கருணாநிதி நியாயப்படுத்துகிறார். இலங்கைத் தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 1980-ம் ஆண்டிலிருந்து எம்.ஜி.ஆரும், நானும் விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்தோம். ஆனால் ராஜீவ் காந்தியை கொலை செய்த பின், விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பாக மாறிவிட்டது. அப்போது முதல் நான் விடுதலைப் புலிகளை எதிர்த்து வருகிறேன். ஆனால், வெள்ளைக் கொடிகளை அசைத்துக் கொண்டு ராணுவத்தின் முன் சரணடைந்த விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் கொன்றதை கண்டிக்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துக்கள்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2010 3:45:00 AM
7/7/2010 3:45:00 AM
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2010 3:43:00 AM
7/7/2010 3:43:00 AM
By senthil
7/7/2010 3:26:00 AM
7/7/2010 3:26:00 AM
By Manohar
7/7/2010 1:16:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *விடுதலைப் புலிகள் ஆதரவு: ஜெயலலிதா விளக்கம்7/7/2010 1:16:00 AM
சென்னை, ஜூலை 7: விடுதலைப் புலிகள் அமைப்பை தாம் துணிச்சலுடன் எதிர்ப்பதாகவும், முதல்வர் கருணாநிதி அப்படி எதிர்க்கவில்லை எனவும் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் கருணாநிதியும் போர்க் குற்றவாளிதான் என குற்றஞ்சாட்டி வெளியிட்ட எனது அறிக்கையை அவர் கண்டித்திருப்பதை நான் வரவேற்கிறேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நியாயமான விசாரணையை எதிர்கொள்ள ஏதுவாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து என் மீது குற்றம் சுமத்தியுள்ளார் கருணாநிதி.
“தடை செய்யப்பட்ட எல்.டி.டி.ஈ. இயக்கத்தின் எந்த உறுப்பினரும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது” என்ற மற்றொரு தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்தும் என் மீது கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார்.
போர் நடக்கும் போது பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்று நான் தெரிவித்தது உண்மை தான். நடைமுறையில் உலகம் சந்தித்த ஒவ்வொரு போரிலும் நடைபெற்றது இதுதான். ஆனால் கருணாநிதி, வேண்டுமென்றே போரின் போது பொதுமக்கள் கொல்லப்படுவதையும், போர் முடிந்துவிட்டது என்று கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட பின்னர் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்ததையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.
என்னை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரானவள் என்று குற்றம் சுமத்துவதன் மூலம் தமிழர்களுக்கு எதிரானவள் என்ற முத்திரையையும் குத்தலாம் என கருணாநிதி நினைக்கிறார். 1980-களிலிருந்து எம்ஜிஆரும், நானும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வந்தோம். ஆனால், தமிழ் மிதவாதிகளையும், போட்டி அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும், முன்னாள் பிரதமரையும் கொலை செய்ததற்குப் பிறகு, விடுதலை போராட்ட அமைப்பு தீவிரவாத அமைப்பாக மாறிவிட்டது என்பது வெளிப்படையானது.
அந்த தருணத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை துணிச்சலுடன் நான் எதிர்த்தேன். கருணாநிதி எதிர்க்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கும் துணிச்சல் கருணாநிதிக்கு என்றைக்குமே இருந்ததில்லை. இன்றைக்குக் கூட, போரில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை நான் கண்டிக்கவில்லை. ஆனால், வெள்ளைக் கொடிகளை அசைத்து, ராணுவத்தின் முன்பு சரணடைந்த விடுதலைப் புலிகளை வேண்டுமென்றே கொன்றதை நான் கண்டிக்கிறேன்.
போர் முடிந்துவிட்டது என்ற வார்த்தையை நம்பி பதுங்குக் குழிகளிலிருந்து வெளிவந்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நான் கண்டிக்கிறேன். இவ்வாறு தமிழர்களை கொன்று குவித்ததற்குக் காரணமானவர்களுடன் விருந்தில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய மகளையும், மூத்த திமுக கட்சியினரையும், கூட்டணியினரையும் அனுப்பி வைத்து அவர்கள் விலை உயர்ந்த பரிசு பொருட்களுடன் இந்தியா திரும்பி வந்ததற்குக் காரணமான முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை நான் கண்டிக்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்
By Ilakkuvanar Thiruvalluvan
7/6/2010 3:52:00 PM
7/6/2010 3:52:00 PM
By ssk
7/6/2010 3:44:00 PM
7/6/2010 3:44:00 PM
By தஞ்சை ராஜு
7/6/2010 3:32:00 PM
7/6/2010 3:32:00 PM
By Manohar
7/6/2010 3:30:00 PM
7/6/2010 3:30:00 PM
By kennedy
7/6/2010 3:19:00 PM
7/6/2010 3:19:00 PM
By murugan
7/6/2010 3:09:00 PM
7/6/2010 3:09:00 PM
By Elango,Chennai
7/6/2010 3:08:00 PM
7/6/2010 3:08:00 PM
By Thani
7/6/2010 3:00:00 PM
7/6/2010 3:00:00 PM
By Vel
7/6/2010 2:58:00 PM
7/6/2010 2:58:00 PM
By Voice of Tamil Nadu
7/6/2010 2:35:00 PM
7/6/2010 2:35:00 PM
By Abdul Rahman - Dubai
7/6/2010 2:34:00 PM
7/6/2010 2:34:00 PM
By தஞ்சை ராஜு
7/6/2010 2:28:00 PM
7/6/2010 2:28:00 PM
By tamilkudimagan
7/6/2010 2:25:00 PM
7/6/2010 2:25:00 PM
By Abdul Rahman - Dubai
7/6/2010 2:25:00 PM
7/6/2010 2:25:00 PM
By R
7/6/2010 2:19:00 PM
7/6/2010 2:19:00 PM
By தஞ்சை ராஜு
7/6/2010 2:12:00 PM
7/6/2010 2:12:00 PM
By manudan
7/6/2010 2:09:00 PM
7/6/2010 2:09:00 PM
By rajasji
7/6/2010 1:56:00 PM
7/6/2010 1:56:00 PM
By Paris EJILAN
7/6/2010 1:43:00 PM
7/6/2010 1:43:00 PM
By KANIMOZERAJA
7/6/2010 1:40:00 PM
7/6/2010 1:40:00 PM
By Tamilan
7/6/2010 1:30:00 PM
7/6/2010 1:30:00 PM
By sbala
7/6/2010 1:24:00 PM
7/6/2010 1:24:00 PM
By sbala
7/6/2010 1:24:00 PM
7/6/2010 1:24:00 PM
By TAMIZHAN
7/6/2010 12:57:00 PM
7/6/2010 12:57:00 PM
By K.Thirumalairajan
7/6/2010 12:53:00 PM
7/6/2010 12:53:00 PM
By SANI BHAGAVAN
7/6/2010 12:52:00 PM
7/6/2010 12:52:00 PM
By TAMIZHAN
7/6/2010 12:51:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/6/2010 12:51:00 PM