கொழுப்பெடுத்த செயல். தமிழர்க்குத் தேசிய மொழி தமிழ். தமிழ்நாட்டில் தமிழில் வாதாடுவது நம் அடிப்படை உரிமை. அவரவர் மாநிலத்தில் அவரவர் மாநில மொழிகளில் வாதாடுவது அவரவர் உரிமை. ஆனால், வேண்டும் என்று நம் உரிமையைக் கேலி செய்யும் வகையில் வேறு மொழியில் தமிழ்நாட்டில் வாதிடுவது கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கது. சிலர் எழுதுவது போல் இந்தி இந்தி பேசும் மொழியினருக்கு மட்டுமே தேசிய மொழி.இந்தியாவின் தேசிய மொழியன்று. இந்தியா என்றால் இந்தி என்னும் இந்திக்காரர்களின் திரிபு வாதத்திற்கு நம்மவர்களும் இரையானதால் தவறாக எழுதுகின்றனர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++
சென்னை, ஜூலை.5-
சென்னை ஐகோர்ட்டில் தமிழில் வாதாட நீதிபதிகள் அனுமதித்து உள்ளனர். இதனால் வக்கீல்கள் தமிழில் வாதாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் தலைமையிலான பெஞ்சு முன்பு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சலுகை தொடர்பாக தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது வக்கீலுக்கு பதில் ராணுவ வீரரே வாதாடினார். அவர் இந்தியில் தனது வாதங்களை எடுத்து வைத் தார். இதற்கு தலைமை நீதிபதி அனுமதி மறுத்தார்.
நீங்கள் இந்தியில் வாதாடுவது எனக்கு மட்டுமே புரியும். உடன் இருக்கும் நீதிபதிக்கு புரியாது. நீங்கள் தமிழில் வாதாடுங்கள். அல்லது ஆங்கிலத்தில் வாதாடுங்கள் என்று கூறினார்.
+++++
இந்தி தேசிய மொழி அல்ல. வேண்டுமானால் அரசியல் சட்டத்தை படித்து தெரிந்து கொள்ளலாம் அல்லது சட்ட ஆலோசகரை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இது சம்பந்தமாக சமீபத்தில் குஜராத் ஹைகோர்ட் தீர்ப்பு கூட வந்துள்ளது. இந்திய அரசியல் சட்டமே ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டுள்ளது இந்தியில் அல்ல. |
தமிழ் இனிமையான மொழி. தமிழரே, தமிழை தமிழரை தவிர மற்ற மொழியினர் வெறுக்க செய்து விடாதிர். தமிழ் மீது பற்று இருக்கலாம். ஆனால் வெறி இருப்பது அழிவை ஏற்படுத்தும். தேசிய மொழியான ஹிந்தி மொழியை பேச மறுப்பது கேவலம். இந்தியாவை தவிர வேறு எங்கும் இந்த கூத்தை காண முடியாது. |
தமிழில் வாதாட அனுமதிக்கும்பொழுது இந்தியில் வாதாட அனுமதித்தால் என்ன?இந்தி தேசிய மற்றும் அரசு மொழியாச்சே ஏன் அவருக்கு மட்டும் நியாயம் மறுக்கப்பட்டது என்ன சட்டமோ என்ன நியாயமோ. மிரட்டலுக்கு பயப்படுவதுதான் சட்டம் போலும் வாழ்க இந்திய ஜனநாயகம். வளர்க சட்டத்தை பயன் படுத்துபவர்கள். |
தமிழ்நாட்டிலே ஹிந்தி மற்றவர்களுக்கு புரியாது. ஆனால் டேல்ஹியிலே தமிழ் மற்றவர்களுக்கு புரியும்! |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக