வெள்ளி, 9 ஜூலை, 2010

தமிழ் வழி பி.இ. விரிவுபடுத்தப்படும்: க. பொன்முடி



சென்னை, ஜூலை 8: தமிழ் வழி பி.இ. படிப்புகள் அடுத்த ஆண்டு மேலும் விரிவுபடுத்தப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் க. பொன்முடி கூறினார்.  பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.  கலந்தாய்வுக்கு வியாழக்கிழமை வரை 8,391 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,279 பேர் வரவில்லை. கலந்தாய்வுக்கு வந்திருந்தவர்களில் 25 பேர் பி.இ. இடம் வேண்டாம் என்று கூறிவிட்டனர். மேலும், ஒருவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதன்படி, இதுவரை 7,086 இடங்கள் நிரம்பியுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 2,474 இடங்கள் நிரம்பின.  முன்னதாக, உயர் கல்வி அமைச்சர் க. பொன்முடி வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வைப் பார்வையிட்டார்.  அப்போது அவர் கூறியது:  இதுவரை நடைபெற்ற கலந்தாய்வு முலம் 7,086 மாணவர்கள் பி.இ. இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். அவர்களில் 2,332 பேர் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள். அண்ணா பல்கலைக்கழகங்களின் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் உள்ள தமிழ் வழி பி.இ. படிப்புகளில் இதுவரை 15 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.  தற்போது சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் மட்டுமே தமிழ் வழியில் உள்ளன. தமிழ் வழி பி.இ. படிப்புக்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக்கள்
 
பாராட்டுகள். அடுத்த ஆண்டு அனைத்து நிலைகளிலும் தமிழ்வழிப் பொறியியல் வரும் வகையில் திட்டமிட்டுச் செயலாற்றுக. தமிழ் வழி பயின்றவர்களுக்குப் பணி முன்னுரிமை என விரைவில் ஆணை பிறப்பித்தால் தமிழ் வழி படிப்போர் பெருகுவர்; நாடு நலம பெறும்.ஆவன ச‌ெய்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2010 6:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக