புதன், 9 அக்டோபர், 2024

தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின் தொடர் நிகழ்வு, சென்னை, விருது வழங்கல்

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர். 

 (திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௨௰௮ – 528)

தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின் தொடர் நிகழ்வு

முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (20, 21, 22-09-2024) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் சிறப்பாக நடைபெற்றது.

இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் தொல்காப்பிய விருதுகள், இலக்குவனார் விருதுகள் வழங்கலும தொல்காப்பிய ஆன்றோர் நாட்காட்டி வெளியிடலும் நூல்கள் வெளியிடலும் ஆகிய தொடர் விழா சென்னையில் நடைபெற உள்ளது.

நாள் புரட்டாசி 26, 2055 / சனி / 12.10.2024

மாலை 5.30 மணிக்குத் தேநீருடன் தொடங்கி இரவு 8.30 மணிக்கு இரவு உணவுடன் நிறைவுறும்.

நிகழ்விடம் : விரிவுரை அரங்கம், தாழ் தளம்,  தே.ப.ச.(ICSA) மைய அரங்கம் , அரசு அருங்காட்சியகம் எதி்ப்புறம், பாந்தியன் சாலை தொடங்குமிடம், எழும்பூர், சென்னை 8

தலைமை:

இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

நூல்  ‘தமிழ்ச்சிமிழ் – தொல்காப்பியம்’

வெளியீடு: முனைவர் வே.இரா.ச.சம்பத்து

பெறுநர்: முனைவர் பேரா.மரிய தெரசா, முந்நூறு நூல்களின் ஆசிரியர்

       நூல்  ‘தொல்காப்பியமும் பாணினியமும்’

வெளியீடு: முனைவர் மு.முத்துவேலு

பெறுநர்: முனைவர் திருக்குறள் இலலிதா

தொல்காப்பிய ஆன்றோர்கள் பட நாட்காட்டி

வெளியீடு: திரு சோ.அய்யர் இ.ஆ.ப.(பநி.)

பெறுநர்: கலைமாமணி முனைவர் வாசுகி கண்ணப்பன்

தலைவர், வாசுகி கண்ணப்பன் அறக்கட்டளை

இலக்குவனார் விருதாளர்களுக்குப் பொன்னாடைகள் அணிவித்துச் சிறப்பிப்பவர்

பொறி. இலக்குவனார் திருவேலன்

தொல்காப்பிய விருதாளர்களுக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிப்பவர்

கலைமாமணி முனைவர்வா.மு.சேதுராமன்

நிறுவனத் தலைவர், பன்னாட்டுத்தமிழறவு மன்றம்

இலக்குவனார் விருதுகளும் தொல்காப்பிய விருதுகளும் வழங்கிச் சிறப்புரை

முனைவர்ம.இராசேந்திரன்

மேனாள் துணைவேந்தர்,தமிழ்ப்பல்கலைக்கழகம்

ஏற்புரைகள் – விருதாளர்கள் :

முனைவர் பொ.ந.கமலா

முனைவர் ப. மருதநாயகம்

புலவர் ச.ந. இளங்குமரன்

முனைவர் மு.சோதிலட்சுமி

நன்றியுரை:

தமிழ்த்தொண்டர்  வேல் சுப்புராசு

இலக்குவனார் இலக்கிய இணையம் இந்நிகழ்வில் வழங்கும் விருது பெறுநர் அனைவரும் பல்வேறு வகைகளில் சிறப்பாகத் தமிழ்ப்பணி யாற்றி  வருபவர்கள். எனினும் இங்கே அவர்களின் தொல்காப்பியப் பணிகள் மட்டுமே கருதிப் பார்க்கப்பட்டன.

இலக்குவனார் விருதாளர்கள்

முனைவர் பொ.நா.கமலா

முனைவர் மருதநாயகம்

முனைவர் செல்வநாயகி சிரீதாசு

முனைவர்  தாயம்மாள் அறவாணன் 

முனைவர் க. இராமசாமி

முனைவர் கோபிநாதன்

முனைவர் வெ.முருகன்

புலவர் த.சுந்தரராசன்

முனைவர் மு.இளங்கோவன்

 முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார்

முனைவர் விட்ணுகுமாரன்

தொல்காப்பிய மணி விருதாளர்கள்

புலவர் கு.வெற்றியழகன்

புலவர் ச.ந.இளங்குமரன்

முனைவர் மு. சோதிலட்சுமி

முனைவர் த. தான் இஃச்டோனி

முனைவர் இல.சுந்தரம்

சொல்லாக்கியன் (சு.தீனதயாளன்)

தொல்காப்பியச் சுடர் விருதாளர்கள்

கவிஞர் தஞ்சை ம. பீட்டர்

தமிழ்த்திரு அ.இருளப்பன்

முனைவர் கரு. முருகேசன்

தொல்காப்பிய இளமணி விருதாளர்கள்

அ.செந்தமிழ்ச் சாலினி

அ.முத்தமிழ்ச் சாமினி

குறிப்பு: 1. வருகையாளர்கள் ஒவ்வொருவருக்கும் இரு நூல்களின் ஒவ்வொரு படியும் நாட்காட்டி ஒரு படியும் விலையின்றி வழங்கப் பெறும். கூடுதல் படிகள் வேண்டுமெனில் விலை கொடுத்து வாங்க வேண்டும்

.2.தங்கள் வருகையை 98844 81652 எண்ணில் 11.10.24 காலை

 10.00 மணிக்கு முன்னதாகப் பதிய வேண்டுகிறோம். நன்றி 

தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின் தொடர் நிகழ்வு, சென்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக