ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான
கட்டுரைப் போட்டி முடிவுகள்
உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 123 ஆவது பிறந்த நாளையும் முன்னிட்டு, ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள், முற்றாக ஒழிப்பதற்கான தீர்வுகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டி முடிவுகள் வருமாறு:
முதல் பரிசு: முனைவர் தாமரை, திருச்சி
இரண்டாம் பரிசு: முனைவர் தானப்பன், புதுதில்லி
மூன்றாம் பரிசு: முனைவர் வதிலை பிரதாபன்
முதல் பரிசிற்கான உரூ. 5,000 / தொகையில் கட்டுரையில் சில பிறமொழிச்சொற்கள் இடம் பெற்றிருந்தமையால், உரூ 2,000/ பிடிக்கப்பட்டு இருவருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அவ்வாறு பெறுநர்
எழுத்தாளர் ஞானப்பிரகாசன்
திருவாட்டி புனிதா சிவக்குமார்
இரண்டாம் பரிசு பெற்ற முனைவர் தானப்பனின் கட்டுரையில் சில கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப்பெற்றமையால் பரிசுத்தொகை மூவாயிரம் உரூபாயில் உரூ.ஐந்நூறு பிடிக்கப்பட்டு பங்கேற்பாளர் ஒருவருக்கு ஊக்கப்பரிசாக வழங்கப்பெறுகிறது.
அவ்வாறு பரிசு பெறுநர்
ஆரணி பாலு (எ) கு.பாலாசி
இவர்களுக்குப் பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த நாளான கார்த்திகை 1 இல் / 17.11.2022 அன்று கூகுள் செலுத்துகை வழிப் பரிசுப் பணம் அனுப்பப்படும்.
பரிசுப் புரவலர்கள்
மேனாள் முதல்வர் முனைவர் மதியழகி
இலக்குவனார் மன நல மருத்துவமைனத் தலைவர் மரு.செல்வமணி தினகரன் ஆகியோருக்கு நன்றி.
கவிஞன் தமிழ்க்காதலன்
செயலாளர், தமிழ்க்காப்புக் கழகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக