செய்தி மடல் – Newsletter |
மதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு, வணக்கம். சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கான புதிய கால அட்டவணையைத் தங்களுடன் பகிர்கின்றோம். இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் உள்ள அறிஞர்களின் ஆர்வத்தையும் வேண்டுகோளையும் கருத்தில் கொண்டு ஆய்வுப் பணிகளுக்கான கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கால அட்டவணை பின்வருமாறு 1. ஆய்வுச் சுருக்கம் வந்தடைய வேண்டிய தேதி: 15.நவம்பர்.2022. 2. ஆய்வுச் சுருக்கம் பற்றிய தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி: 30.நவம்பர்.2022. 3. முழு ஆய்வுக் கட்டுரை வந்தடைய வேண்டிய தேதி: 15.பிப்ரவரி.2023. 4. மாநாட்டில் படைக்கப்படுகின்ற கட்டுரை முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி: 28.பிப்ரவரி.2023. இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் ஆய்வுச் சுருக்கத்தை அனுப்பிய அறிஞர்களுக்கு நன்றி. சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினைப் பற்றிய செய்திகளை www.icsts11.org என்ற மாநாட்டின் இணையதளத்தில் காணவும். ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பான வினாக்கள் மற்றும் கருத்துக்களை contact@icsts11.org என்ற மின்வரிக்கு அனுப்பவும். நன்றி. ஆய்வுக்குழு – பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர் |
ஆய்வுச் சுருக்கம் அனுப்ப வேண்டிய மின்வரி E-mail address for submission of abstracts academic-committee@icsts11.org |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக