(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 452 – 469 இன் தொடர்ச்சி)
470. கதிரிய நீரியல் | Radiohydrology |
471. கதிரிய நுட்பியல் | Radiotechnology |
472. கதிரியக் கால நிரலியல் | Radio Chronology |
473. கதிரிய ஏமவியல் எதிரூக்கி யியல் என்கின்றனர். அவ்வாறு சொல்வதைவிடச் சொற்சீர்மை கருதி கதிரிய ஏமவியல் என்பது ஏற்றதாக இருக்கும். | Radioimmunology |
474. கதிரிய வளைசலியல் | Radioecology |
475. கதிரியப் பண்டுவம் | Radiotherapy |
476. கதிரியப் பனியியல் | Radioglaciology |
477. கதிரியப் புவியியல் | Radiogeology |
478. கதிரியல் | Radiology |
479. கதிர்வீச்சு இயற்பியல் | Radiation physics |
480. கதிர்வீச்சு வளைசலியல் | Radiation Ecology |
481. கத்தி இயல் | Machirology |
482. கபால யியல் மண்டை உளப்பான்மை உறவியல், கபால அளவையியல், போலி மனவியல் என்கின்றனர். phrēn என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மனம். இத்துறை, மண்டை ஓட்டின் மீதுள்ள புடைப்புகளை அளவிட்டு மனநலப் பண்புகளைக் கணிக்கும் போலி அறிவியல் துறை. சுருக்கமாகக் கபால இயல் என்றே சொல்லலாம். | Phrenology(1) |
483. கரிசியல் | Hamartiology |
484. கரிம வேதியியல் | Organic Chemistry |
485. கருதுகை விலங்கியல் Cryptozoology மறை விலங்கியல், அழி விலங்கியல், கருதுகை விலங்கியல் எனப் படுகிறது. Crypto என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு மறை, கமுக்கம் முதலிய பொருள்கள். இங்கே கருதப்படுதல் என்னும் பொருளில் வந்துள்ளது. இச்சொல்லின் நேர் பொருள் மறைக்கப்பட்ட விலங்குகள் பற்றிய ஆய்வு என்பதாகும். இஃது உண்மையில் விலங்கியலோ அறிவியலோ அல்ல. போலி அறிவியலாகும். எனவே, விலங்கியலாகக் கருதப்படுவதால், கருதுகை விலங்கியல் Cryptozoology எனலாம். | Cryptozoology |
486. கருத்தடை நுட்பியல் | Contraceptive Technology |
487. கருத்திணைவியல் (மெய்யியல் துறை) | Hodology(1) |
488. கருத்திய வாயு இயங்கியல் | Ideal aerodynamics |
489. கருத்தியல் | Ideology |
490. கருப்பொருளியல் இலக்கிய அடிப் பொருளாய்வு, அடிப் பொருள் ஆய்வு, கருப்பொருள் ஆய்வு, உரிப் பொருளாய்வு, மையப் பொருளாய்வு எனப்படுகிறது. இலக்கியங்களின் மையக் கருத்துகள் குறித்த ஆய்வு. முதலில் கருத்தியல் எனக் குறித்திருந்தேன். கருத்தியல் தனியாக உள்ளதால் இலக்கியக் கருப்பொருளை ஆராயும் இதனைக் கருப் பொருளியல் என மாற்றியுள்ளேன். | Thematology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக