குவிகம் இலக்கிய வாசல்
ஏப்பிரல் 2022 முதல் மார்ச்சு 2023 வரை வெளிவர இருக்கும் இதழ்களுக்காகப் படைப்புகளை வரவேற்கிறோம்.
1. முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசுகள் முறையே உரூ.5000, உரூ.3000, உரூ.2000 வழங்கப்படும்.
2. வெளியீட்டிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் மற்ற கதைகள் ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் உரூபாய் வெகுமதி வழங்கப்படும்.
3.படைப்புகள் நாலாயிரம் முதல் எட்டாயிரம் சொற்களுக்குள் (4000 -8000) இருக்கவேண்டும்.
4. அச்சு மற்றும் இணையதளம்/ வலைப்பூ/ முகநூல்/ கிண்டில் போன்ற எதிலும் வெளியிட்ட படைப்புகளாக இருக்கக் கூடாது.
5. முடிவுகள் அறிவிக்கப்படும்வரை வேறு போட்டிக்கோ வெளியீட்டிற்கோ அனுப்பக்கூடாது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்ந்தெடுக்கப்படாத படைப்புகளை வேறு வெளியீடுகளுக்கு அனுப்பலாம்.
6.படைப்புகள் ஒருங்குகுறி(யூனிகோடு)ட் எழுத்துருவில் சாெற்(MSWORD) கோப்பாக மின்னஞ்சலில் kurumpudhinam@gmail.com மின்வரிக்கு அனுப்ப வேண்டும்.
7.ஒருவர் ஒரு படைப்புக்குமேல் அனுப்பவேண்டா.
8. முந்தைய ஆண்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களும் வெற்றி பெறாதவர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம், ஆனால் சென்ற ஆண்டு அனுப்பிய கதைகளைத் திரும்ப அனுப்ப வேண்டா.
9.குமுக மேம்பாட்டுக் கதைகள், மனவியல் கதைகள், நகைச்சுவைக் கதைகள், அறிவியல் கதைகள், உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கதைகள், வரலாற்று ஆராய்ச்சிக் கதைகள், வட்டார மொழிக் கதைகள், பெண்ணியக் கதைகள் போன்ற குறும் புதினங்களை எதிர்பார்க்கிறோம்.
10. படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசிநாள்- கார்த்திகை 29, 2052 / 15.12.2021.
தேர்வாளர்களின் முடிவே இறுதியானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக