6 எழுத்தாளர்களுக்குப் புத்தகப்பதிப்பாளர்கள் சங்கத்தின்
கலைஞர் பொற்கிழி விருது
எழுத்தாளர் இராசேந்திர சோழன், கவிஞர் அபி, எழுத்தாளர் எசு.இராமகிருட்டிணன், தமிழ்ப்புதுமை நாடக இயக்குநர் வெளி இரங்கராசன் ஆகியோருக்குக் கலைஞர் பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி உரூபாயை தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் – பதிப்பாளர்கள் சங்கம்(பபாசி), அமைப்பிற்கு வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும் ஓர் ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் ஓர் இலட்சம் உரூபாய் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்கள்.
2007-இல் 30ஆவது சென்னை புத்தகக் காட்சியைத் தொடக்கி வைக்கப்பட்ட பொழுது வழங்கப்பட்ட நிதியிலிருந்து அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இதிலிருந்து 2007ல் இருந்து இதுவரை 84 எழுத்தாளர்களுக்கு 84 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மகுடைத் தொற்றின் காரணமாக நடைபெறாமல் நின்றுவிட்ட 2020ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவும் 2021ஆம் ஆண்டுக்கான விழாவுடன் இணைந்து நடைபெறும். விழா குறித்த நாள், நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அதன் தலைர் அறிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான விருதாளர்களை அதற்காக அமைக்கப்பெற்ற குழு தேர்வு செய்துள்ளது. தேர்வுபெற்ற விருதாளர்கள் பட்டியலை பபாசியின் தலைவர் ஆர்.எசு. சண்முகம் அவர்கள் அறிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு விருது பெறும் எழுத்தாளர்கள்:
அபி – கவிதை
இராசேந்திர சோழன் – புனைவிலக்கியம்
எசு.இராமகிருட்டிணன் – உரைநடை
வெளி இரங்கராசன் – நாடகம்
மருதநாயகம் – ஆங்கிலம்
நதித்து சாகியா – பிற இந்திய மொழி(காசுமீரி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக