இலக்கியக் கூட்டம் : எழுத்தாளர் திரு.அழகிய பெரியவன்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தொடர் இலக்கியக் கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு படைப்பாளியின் புத்தகங்களை வாசித்து வருகிறோம். படைப்பாளிகளும், வாசகர்களும் என்ற தொடர் கூட்டங்களில் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.

இம் மாதம் எழுத்தாளர் திரு.அழகிய பெரியவன் அவர்களுடன்  கலந்துரையாடல் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. திரு.அழகிய பெரியவன், சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளி. இவரது படைப்புகள் மிகவும் நுட்பமாக விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை முன்வைக்கின்றன. இவரது “தகப்பன் கொடி” புதினம் தமிழின் முதன்மையான புதினங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. சிறுகதைகள், குறும்புதினங்கள், கவிதைகள் எனத் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைத் திரு. அழகிய பெரியவன் பெற்றுள்ளார்.

திரு.அழகிய பெரியவன் அவர்களின் நூல்கள் அமேசான் கிண்டில் புத்தகங்களாக கிடைக்கின்றன https://tinyurl.com/AzhagiyaPeriyavan

அவருடன் நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்க உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

ஆவணி 26, 2052 – 11.09.2021

இரவு 8:30 மணி

(EDT – அமெரிக்கக் கிழக்கு நேரம்)

அணுக்க நேரலை – Zoom Live

https://tinyurl.com/FeTNA2020ik

கூட்ட எண்  / Meeting ID : 954 1812 2755