13 November 2020 No Comment

உலகத் தமிழர்கள் பங்கேற்கும்
உலக அருவினை(சாதனை) நிகழ்வு, துபாய்
அன்பான உலகத் தமிழ் மக்களுக்கு,
கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளையின் அருவினை(சாதனை) நிகழ்வாக, வருகின்ற 2051 ஐப்பசி 28/2020 நவம்பர் 13 ஆம் நாள் துபாய் நேரம் பகல் 2 மணி, (இந்திய நேரம் பகல் 3.30) முதல் நவம்பர் 14 ஆம் நாள் பகல் 2 மணி (இந்திய நேரம் பகல் 3.30) மகுடை(கொரோனா) விழிப்புணர்வுக்காக உலகத் தமிழர்கள் பங்கேற்கும் உலக அருவினை(சாதனை) நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
தொடர்ச்சியாக 24 மணி நேரம்,24 நாடுகளிலிருந்து 24 தலைமையின் கீழ் மற்றும் பல எண்ணற்ற தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டு தொடர் நிகழ்வாக நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் பேச்சு, கவிதை, புதிர்வினா(Quiz), பாடல், சிறப்பு சொற்பொழிவுகள், பல்சுவை நிகழ்ச்சிகள், நடைபெறவிருக்கின்றன.
ஆகையால் இந்த நிகழ்விற்குத் தாங்கள் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
வாய்ப்பைத் தவற விடாதீர்கள்! வாருங்கள்!
உலக அருவினையில் இடம் பிடிப்போம்!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக