புற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்
இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முதுகுளத்தூர் இளைஞர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் அல்லா என்.எசு.ஏ. நிசாமுதீன் ஆவார்.
இவரது மகன் சுபைர் அகமது. இவர் துபாயில் பள்ளி, கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார்.
தற்போது இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இந்த ஆராய்ச்சியின் மூலம் புற்றுநோய் வருவதை முன்னரே அறிந்து கொண்டு தேவையான மருத்துவத்தை மேற்கொள்ள உதவியாக இருக்கும். பல்கலைக்கழகத்தில் கடந்த 11-அன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவரது குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர்.
சுபைர் அகமது மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் முதுகுளத்தூர் நகருக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த ஆராய்ச்சியின் பயன் அனைவருக்கும் கிடைப்பதுடன் புற்றுநோயால் உயிரிழப்பு இல்லாமல் தடுக்கப்பட வேண்டும். இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ள சுபைர் அகமதுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக