தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல்
கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை
அரசினால் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.
அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாகவும், தமிழீழ விடுதலைக்
கோரிக்கையை உயர்த்திப் பிடித்தும் நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான
சென்னைக் கடற்கரையில்(‘மெரீனாவில்’) கண்ணகி சிலை பின்புறம் ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு வைகாசி 07 / மே 21 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.
தமிழீழ இனப்படுகொலையை நாம் மறந்து விட
முடியாது. கொல்லப்பட்ட 30,000 குழந்தைகளுக்கும், விதவைகளாக்கப்பட்டு
சித்திரவதைக்குள்ளாக்கப்படும் 90000 தமிழ்ப் பெண்களுக்கும், பாலியல்
வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கும் நீதியைக் கேட்காமல் நாம் கடந்து விட முடியாது.
அமெரிக்கா-இந்தியா-இங்கிலாந்து-சீனா-இலங்கை
முதலான நாடுகளின் இணைந்து நின்று நடத்திய இந்த இனப்படுகொலையை தொடர்ந்து
நினைவு கூர்வோம். நீதி கிடைக்கும் வரை குரல் கொடுப்போம். உலகம் மறக்கச் சொல்வதை மறுப்போம்.
ஆர்மீனியர்கள் தங்களுக்கு நடந்த
இனப்படுகொலைக்காக 100 ஆண்டுகள் கடந்து இன்னும் கூடுகிறார்கள். (இ)யூதர்கள்
70 ஆண்டுகள் கடந்த பின்னும் தங்களுக்கு நடந்த இனப்படுகொலையை நினைவு
கூர்கிறார்கள். தமிழர்களுக்கு இனப்படுகொலை நடந்து 8 ஆண்டுகளே ஆகிறது.
அதற்குள் நாம் மறந்து கடந்து விடுவோமா என்ன?
குடும்பத்துடன் வாருங்கள். பல்லாயிரக்கணக்கில் கூடுவோம். ஏந்திப் பிடிப்பது மெழுகுவர்த்தியை மட்டுமல்ல, தமிழீழ விடுதலைக் கோரிக்கையையும் தான்.
-மே 17 இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக