சங்கத்தமிழ் சொற்பேழை
பேராசிரியப் பெருமக்களே!
ஆய்வு அறிஞர்களே!
மாணவக் கண்மணிகளே!
ஆய்வு அறிஞர்களே!
மாணவக் கண்மணிகளே!
அரிய படைப்பாகிய ’ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு’ என்னும் அறிய நூலிற்கு பிறகு
http://drkamatchi.in/ (SANGAM CORPUS AND CONCORDANCE)
என்னும் வலைத்தளம் தமிழ் இலக்கியம்,
இலக்கணம், மொழியியல், கணினி மொழியியல் ஆகியவற்றில் ஆர்வம் உள்ள
ஆர்வலர்களுக்காகப் புதியதோர் கோணத்தில் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வலைத்தளம் பற்றி:
இவ்வலைத்தளத்தில் எட்டுத்தொகை இலக்கியங்களில் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்றவற்றையும் திருக்குறள், இன்னாநாற்பது, இனியவை நாற்பது போன்ற நூல்களுக்குத் தமிழ் அகரவரிசைப்படி அகராதியும் ஆங்கில அகர வரிசையில்
அகராதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்விலக்கியங்களில் உள்ள இலக்கணக் கூறுகள் கொடுக்கப்பட்டு அவற்றிற்கு
இணையான தமிழ் – ஆங்கில இலக்கணவகைப்பாடு நேர்த்தியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியும் கூறும்/கூறாத செய்திகள், காணக்கிடைக்கின்றன.
இலக்கணத்தையும் எடுத்துக்காட்டுக்களையும் ஒருசேரக் காட்டும் வலைத்தளம்.
தற்கால மொழியியல் கோட்பாடுகளின்படி உருபன்கள் பகுக்கப்பட்டுள்ளன.
சில சொற்களையும் இலக்கணக்கூறுகளையும் பிரித்தறிவதில் யாப்பிலக்கண முறைம்மையில் தளைதட்டுகின்றனவா என்று
நன்கு ஆய்ந்து பிரித்தறியப்பட்டு உள்ளது.
மொழியியல் கோட்பாடுகள் பின்பற்றப்பட்டாலும் மரபிலக்கணக் கோட்பாடுகளுக்கும் மதிப்பளிக்கப்பட்டுள்ளன.
இலக்கணத்தில் ஆய்வு செய்பவர்களுக்கு இஃது ஓர் அறிய தளம்.
மொழியியல் கோட்பாடுகள் பின்பற்றப்பட்டாலும் மரபிலக்கணக் கோட்பாடுகளுக்கும் மதிப்பளிக்கப்பட்டுள்ளன.
இலக்கணத்தில் ஆய்வு செய்பவர்களுக்கு இஃது ஓர் அறிய தளம்.
அகராதித் தயாரிப்புக்கு ஏற்ற தளம்.
சங்க இலக்கியத்தின் ஆய்வுக்கு உகந்த தளம்.
சங்க இலக்கியத்தின் ஆய்வுக்கு உகந்த தளம்.
சொற்களை அகரவரிசைப்படுத்தல் என்பதைக்காட்டிலும் வேர்ச்சொற்களை அகரவரிசைப்படுத்துதல் என்பதற்கு ஏற்ற தளம்.
சங்கத்தமிழ்ச் சொற்களுக்கு நிகராக ஆங்கிலச் சொற்கள் கொடுப்பது மற்றொரு சிறப்புத்தன்மை.
இலக்கணக்கூறுகளோடு தமிழில் இலக்கண விளக்கம்.
இலக்கணக்கூறுகளோடு ஆங்கிலத்தில் இலக்கண விளக்கம்.
எந்தெந்தப்பாடல்களில் என்னென்ன சொற்கள் இடம்பெற்றுள்ளன என்பதைக் காட்டும் வலைத்தளம்.
இலக்கணக்கூறுகளை அறிந்துகொள்ள அவை இடம்பெற்ற பாடல் எண்ணும் அடி எண்ணும் தரப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சங்க இலக்கியத் தமிழ் அறிவு, யாப்பிலக்கண அறிவு, மரபிலக்கண அறிவு, தற்காலஇலக்கண அறிவு, கணிணி அறிவு, மொழியியல் அறிவு, குறிப்பாக, மொழியியலில் உருபனியல் பகுப்பாய்வு அறிவு ஆகியவற்றை ஒருங்கே பெற்ற வலைத்தளம் எனலாம்.

வலைத்தளத்தை ஒருமுறை பார்த்துவிட்டு உங்கள் பொன்னான கருத்துகளைப் பதிவிடுங்கள். வாழ்த்துரை
மட்டும் அல்லாது மறுப்புரையும் வரவேற்கப்படுகிறது.
மறுப்புரை அறிவியல் ஆய்வு முறையாக இருப்பின் நன்று.
நிறைவடையாத பணி என்றாலும் மனநிறைவுள்ள பணி. இருப்பினும் பணி தொடரும்.
இவண்
முனைவர் அ. காமாட்சி
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
முனைவர் அ. காமாட்சி
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக