எழுக தமிழ் 17 ; ezhuga-thamizh16

யாழில் 8000 ஆயிரம் பேர்!

 எழுக தமிழ்’ நிகழ்ச்சியால் ஆட்டம் கண்ட இலங்கை!

  தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் அமைதிப்படுத்திக்கொள்ளப்பட்ட பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்றைத் தமிழர் தாயகம் கண்டிருக்கின்றது!
  ஈகையர் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் கிழமையில்(வார) இந்த மக்கள் எழுச்சி நிகழ்ந்திருப்பது கவனிப்புக்கு உரியது. இனப்படுகொலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரான இந்த ஏழாண்டுகளில் இத்தகைய மாபெரும் மக்கள் எழுச்சிக்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததற்குக் காரணம், தமிழர் தாயகப் பகுதிகள் தீவிரமான சிங்களப் படைக் கண்காணிப்புக்குள் இருந்ததும், மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் வல்லாளுமைத்தனமான(சர்வாதிகார) நடவடிக்கைகளுமே ஆகும். ஆனால், இன்று அவற்றைக் கூடப் பொருட்படுத்தாது, வடக்கு மாகாண முதல்வர் விக்கினேசுவரன் தலைமையில் மக்கள் ஒன்றாகத் திரண்டுள்ளார்கள். இந்த எழுக தமிழ்’ நிகழ்வைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது. மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வால் பிடிக்கும் சில இணையத்தளங்களும் இச்செய்தியை இருட்டடிப்புச் செய்துள்ளமை பெரும் வருத்தம் தருவதாக அமைந்துள்ளது.
இத்தகைய சூழலில், தமிழ் மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த மாபெரும் எழுச்சிப் பேரணியில் பொதுமக்கள், பொது அமைப்புகள், சங்கங்கள், சமய நிறுவனங்கள், மாணவர்கள் என்று பலதரப்பட்டோரும் பங்கேற்று எழுச்சி முழக்கம் எழுப்பினர். பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் திரளாக வந்து தமது முழு ஒத்துழைப்பை நல்கியுள்ளார்கள். பல அமைப்புகள் இதில் கலந்து கொண்டதால் இலங்கை நாடே ஆட்டம் கண்டுள்ளது. சம்பந்தன், சுமந்திரன், சரவணபவான் போன்ற இன இரண்டகர்களைத் (துரோகிகளை) தனது கைக்குள் வைத்திருக்கும் சிங்கள அரசு, தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்கள் இனி போராட மாட்டார்கள் என்ற இறுமாப்பில் இருந்து வந்தது. ஆனால், நடைபெற்ற இந்நிகழ்வால் சிங்களம் தற்பொழுது குழம்பியுள்ளது.
காணொலி இணைப்பு: https://youtu.be/o8J-KJAgsaA
சுரேசு பிரேமச்சந்திரன் உரை:
இலங்கை வடக்குமாகாண முதல்வர் சி.வி.விக்கினேசுவரன் உரை:
நன்றி: அதிர்வு
தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்