27 September 2015 No Comment
சேக்கிழார் காலம் வரையிலும்
தமிழிசை மரபு அழியவில்லை
செங்கை யாழ் என்னும் செங்கோட்டியாழ்
அல்லது சகோடயாழை இசைத்த பெரும்பாணனாகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர்,
கி.பி.ஆறாவது நூற்றாண்டில் “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய”
திருஞானசம்பந்தர் காலத்தைச் சேர்ந்தவர். தொல்மரபாகிய யாழ் மரபும் பாணர்
மரபும் தொடர்ந்து ஆறாவது நூற்றாண்டு வரை இருந்ததையும் மேலும்
கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார்
பெருமானும் அம்மரபைப் போற்றிப் பாடியிருத்தலின் அக்காலம் வரை தமிழிசை மரபு
அழியாமலே இருந்திருக்கின்றது என்பதையும் அறிகிறோம்.
–தமிழ்ச்சிமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக