செவ்வாய், 30 டிசம்பர், 2014

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – உரையாடல்

mathorupaagan-attai

மார்கழி 16, 2045 / திசம்பர் 31

மாலை 4.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை

இடம் :  பனுவல், 112, திருவள்ளுவர் சாலை,

             திருவான்மியூர்,சென்னை 41.

படைப்பு உரிமையைப் பாதுகாக்க..

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ புதினச் சிக்கல்

குறித்து உரையாடல்

கலந்துகொள்பவர்கள் :

பேராசிரியர் அ.மார்க்சு
எழுத்தாளர் வ.கீதா
பேராசிரியர் வீ.அரசு
நாடகக்கலைஞர் பிரளயன்
எழுத்தாளர் பாரவி
தோழர் விடுதலை இராசேந்திரன்
ஓவியர் மருது
பேராசிரியர் இலட்சுமணன்
எழுத்தாளர் வெளி இரங்கராசன்
எழுத்தாளர் சுப குணராசன்
இயக்குநர் அம்சன் குமார்
இயக்குநர் . அமுதன்
மற்றும் நீங்களும் …
perumalmurugan01


-ரமதல 59

2 கருத்துகள்:

 1. மாதொரு பாகன் நாவலில் வரும் வரலாறு, மனிதன் குழுவாக வாழ்ந்த காலத்தில் இது நடந்தது மட்டுமில்லை திருவிழாவின் நோக்கமே கட்டற்ற் காமத்தை குறைக்கவும் அனுபவிக்கவுமே மேலும் கூத்தாண்டவர் கோயில், முருகன் கோயில் , திருச்சங்கோடு திருவிழவும் உண்டு இப்படி நிறைய கோயிலில் தேவரடியார்கள் இருந்து இத்தொண்டை செய்த்தற்கு கள ஆய்வுகள் உள்ளன...... தாங்கள் நிச்சயம் ஏங்கல்சின்'குடும்பம், அரசு, தனிச்சொத்து' புத்தகம் வாங்கி படித்துவிட்டும் ஏதாவது ஆதராம் கிடைக்குதன்னு பாருங்க தோழர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... இவற்றை கள ஆய்வு செய்தே பெருமாள் முருகன் எழுதியிருக்கிறார் என்று நம்புவாமாக....

  இப்படி அதை எழுதாதே, இதை எழுதாதே என்றால் எழுத்து சுதந்திரம் என்னாவது? இவர்கள் சொல்லும் தேவ பாடையில் மட்டும் இதெல்லாம் இல்லையா என்ன? ஆட்ட கடிச்சி, மாட்டகடிச்சி இப்ப நம்பள கடிக்க வந்துட்டானுவோ... வுட முடியாதுங்கோ.....

  இந்த நாவல் பெண்களை இழிவு படுத்த அவர் எழுதவில்லை.... அப்போ இப்ப வித்து கடன் பெற்று குழந்தை பெறுவது மட்டும் என்ன?.....

  துவரகாசாமிநாதன்

  பதிலளிநீக்கு
 2. அறிவியல்முறைப்படி ஒருவரது விந்தணுவை ஒரு பெண் ஏற்றுக்கொள்வதென்பது அந்த பெண்ணுக்கும் அந்த ஆணுக்குமான எந்தவிதமான நேரடித்தொடர்பையும் உடையதன்று.

  அதையும், ஓர் ஆணை நேரில் கண்டு கலந்து கூடிமுயங்கி ஒரு பிள்ளையை பெற்றுக்கொள்வதற்கும் வேறுபாடுண்டென்பதை மறந்துவிடாதீர்கள்.

  தன் மனைவியை வேறோராண் தொடுவதை எந்தவோராணும் விரும்பமாட்டானென்பதை எப்படி மறுக்கமுடியும்? இந்த கதையில்வரும் காளி தற்கொலைசெய்துகொள்வது அதனாலேயேயென்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்! அவனதுமனநிலை பிறருக்குமட்டும் இல்லாமற்போய்விடுமா?

  தேவரடியார்கள் திருவிழாக்காலங்களில் அவ்வாறு நடந்துகொண்டனரென்பதற்கு வேறுகாரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு குடும்பத்தில் கணவனோடு வாழ்ந்துவரும் ஒரு குடும்பப்பெண் அவ்வாறு 'எவர்வரினும் ஏற்பேன்' என்னும் மனநிலையில் அந்த திருவிழாவில் நடந்துகொள்ளமுடியுமா?

  அப்படி ஒரேயொருநாள்மட்டும் அவ்வாறு நடந்துகொண்டுவிட்டு அதன்பின் கணவனைத்தவிர வேறெவரையும் அண்டவிடாதவளாக அவள் வாழ்வாளென்பது என்னவொரு வேடிக்கையானசெய்தி?

  இது ஊரேயறிந்தசெய்தியாயிருக்கும்போது அவ்வாறு ஒருத்தி பிள்ளைபெற்றுக்கொள்வாளானால் அவள் பெற்றுக்கொள்ளும் அந்த பிள்ளையின் எதிர்காலம் எப்படியிருக்கும்? அவன் யாரென்பதை அந்த ஊர் அறிந்திருக்கும்போது அவனுக்கு அந்த ஊரில் மரியாதையிருக்குமா?

  இதையெல்லாம் எண்ணிப்பார்க்கும்போது இப்படியெல்லாம் நடந்திருக்குமென்பது நம்பமுடியாததாகத்தானிருக்கிறது.

  இது வாய்வழிச்செய்தியென்பதால் எவரோ கட்டிவிட்ட ஒரு கதைதான் இவ்வாறு பலர்வழியாக உருப்பெற்று சொன்னவர்களையும் கேட்டவர்களையும் நம்பவைத்ததைப்போல இன்று பெருமாள்முருகனையும் நம்பவைத்திருக்கிறது!

  பதிலளிநீக்கு