maaveerarkinnam-italy04 maaveerarkinnam-italy03 maaveerarkinnam-italy02 maaveerarkinnam-italy01
இத்தாலி மேற்குமண்டல விளையாட்டுத்துறை அனைத்து தேசிய கட்டமைப்புக்களின் பங்களிப்புடன் இவ்வாண்டிற்கான மாவீரர் கிண்ண விளையாட்டு போட்டிகள் ஆனி 29, 2045, சூலை 13, 2014 அன்று இத்தாலி ரெச்சியோ எமிலியா மாநகரில் சிறப்பாக நடைபெற்றது.
காலை 9.30 மணியளவில் மண்டலப் பொறுப்பாளர் பொதுச்சுடரை ஏற்றி வைக்க இத்தாலிய தேசியக்கொடியையும் தமிழீழத் தேசியக்கொடியையும் முறையே மக்களவை தமிழர் ஒன்றியப்பொறுப்பாளர்கள் ஏற்றி வைத்தனர் தொடர்ந்து கழகக்கொடிகள் ஏற்றப்பட்டன. அடுத்து, முதன்மை ஈகைச்சுடரை விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ஏற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டது.
முதல் நிகழ்வாக திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களுடன் சிறுவர்கள் இணைந்து நடாத்திய அணிவகுப்பு, பெற்றோராலும் பார்வையாளர்களினாலும் வெகுவாகப்பாராட்டப்பட்டது. பாடசாலை ஆசிரியைகள், விளையாட்டு பயிற்றுநர்களினால் சிறப்பாக நெறியாள்கை செய்யப்பட்டிருந்த இவ்வணிவகுப்பு மதிப்பை, தமிழர் ஒன்றியம் மக்களவை- கல்வித்துறை பொறுப்பாளர்கள் இணைந்து நின்று ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து பல பிரிவுகள் கொண்ட நூற்றுக்கு மேற்ப்பட்ட சிறுவர்கள் பங்கேற்ற மெய்வல்லுiர் போட்டிகள் மழலையர் விளையாட்டுகள் கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம்பெற்றன.
மேலும் இந்நிகழ்வில் சிறுவர் பெரியோர்க்கான உதைபந்தாட்டம் ஆண்கள் பெண்களுக்கான கரப்பந்தாட்டம் போட்டி நிகழ்வுகளாகவும் கயிறு இழுத்தல், இசைநாற்காலி, மாற்றுடைப் போட்டிகள் சிறப்பு நிகழ்வுகளாகவும் இடம்பெற்றன. முடிவில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கான சான்றிதழ்கள் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
தமிழ் மக்களின் ஒற்றுமைக்காகவும் எம்மிளம் தலைமுறையினரின் மேம்பாட்டிற்காகவும் எம்மக்களின் உரிமை வாழ்விற்காகவும் தமிழ்த்தேசியத்தின் இருப்பிற்காகவும் வீரச்சாவைத்தழுவிய மாவீர்கள் நினைவு சுமந்த இந்நிகழ்வில் ரெச்சியோ எமிலியா பொலோனியா மாந்தோவா மிலானோ யெனோவா பியல்லா தொரினோ நாப்போலி என இத்தாலி மேற்குமண்டலத்தின் பல மாநகரங்களில் வாழும் எம்மவர்கள் இணைந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு ‘நம்புங்கள் தமிழீழம்..’ பாடலுடன் தேசியக்கொடி இறக்கப்பட்டு ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ எனும் உறுதி மொழி ஏற்கப்பட்டு, அனைத்து நிகழ்வுகளும் நிறைவடைந்தன.