kalaignar06
சூன் 5-ஆம் நாள் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்த நான்கு சிறுமிகளுக்கு, கலைஞர் தமிழ்ப்பெயர் சூட்டினார் என்று முரசொலி செய்தி வெளியிட்டிருக்கிறது. நான்கு சிறுமிகளுக்கும்   ரோசா(ரோஜா), மல்லி, enna-satham-intha-neram_4girlsஅல்லி, முல்லை, என்று பெயர் சூட்டினாராம் கலைஞர். இந்நிலையில் ரோசா என்பது தமிழ்ப்பெயரா என்று சருச்சையை க் கிளப்பியிருக்கிறார் தமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவரான திருவள்ளுவன் இலக்குவனார்.
“தமிழில் ‘ரோ’ என்ற எழுத்தில் தொடங்கும் சொல்லே கிடையாது. ரோசா(ஜா) என்பது தமிழ்ப்பெயர் அல்ல. ரோசாப்பூவும் தமிழ்நிலத்தைச் சேர்ந்தது அல்ல. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் சொன்ன 99 பூக்களின் பெயர்களில் ரோசா இல்லை. முத்தமிழ் அறிஞருக்கு இது தெரியாமல் போனதேனோ?” என்கிறார் அவர்.
 - தமிழக அரசியல் நாள் 11.06.2014, பக்கம் 48.
thamizhagaarasiyal_attai01