அன்புடையீர்
வணக்கம்.
அன்னைத்தமிழில் அனைத்தையும் அறியச் செய்வதற்காக அகர முதல (www.akaramuthala.in) இணைய இதழ் -
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்தநாளான இன்று ( கார்.1, தி.பி.2044 / நவ.17, கி.பி.2013) மலர்ந்துள்ளது.
முதல் இதழில்
- இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் இலக்குவனார் ! கவிஞர் இரா.இரவி
- வாழ்த்துங்கள்! வளர்கிறோம்!
- தேடுகிறேன் . . . ! கவிஞர் கந்தையா
- வேலை வாய்ப்புகள்
- இராசபட்சவின் இராசதந்திரம்!
மதிமுக வழக்குரைஞர் மாநாடு : விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி தீர்மானம்
ஏற்காடு இடைத்தேர்தல் : 27 பேர் வேட்புப் பதிவு
யாழில் காவல்துறையினர் கொடூரமான தாக்குதல்: உலகத் தலைவர்கள் அதிர்ச்சி
இசை அமைப்பாளர் பரத்வாசின் திருக்குறள் பாடல் பேழை
முள்ளிவாய்க்கால் முற்றம்: தமிழக அரசு கட்டித்தர வேண்டும்
-திருமாவளவன்
அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்
திருக்குறள் வாழ்வியல் நூல்! – சுப.வீரபாண்டியன்
தமிழகச் சட்ட மன்றச் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம்!
பிரித்தானியத் தமிழர் பேரவை அறிக்கை
காணிக்கை
தமிழைத் தாங்கும் தமிழ் வழிப் பள்ளிகள் – வெற்றிச்செழியன்
அனைவரும் பார்க்க வேண்டிய முள்ளிவாய்க்கால் முற்றம் - வழக்கறிஞர் இரா.இராசேந்திரன்
காலத்தால் அழியாத தமிழ்நாடன் முனைவர் இளங்கோவன் & - இரத்தின புகழேந்தி
தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! - கவிஞர் இரா .இரவி
ஆழ்மனத்தில் தமிழ் உள்ளது - முனைவர் வெ .இறையன்பு, இ.ஆ.ப
முப்பது நாள்களில் தமிழ் பொள்ளாச்சி நசன்
தொல்காப்பிய விளக்கம் - பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு
வள்ளுவர் வகுத்த அரசியல் - பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
மாமூலனார் பாடல்கள் - பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
தமிழ் வரிவடிவம் காப்போம்! – 1 - தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன்
வாழ்க தமிழ் பேசுவோர்..- வித்யாசாகர்
சருகாகிக் கருகும் அரும்புகள் - முனைவர். எழில்வேந்தன்
தோழர் பொழிலனுக்கு வரவேற்பும் வாழ்த்தும்!
இதழ்களின் நிலை என்ன?
நாணுத்தரும் - முனைவர் ஔவை நடராசன்
மீனியல் (Icthyology) - பேரா.முனைவர் இலக்குவனார் மறைமலை
காப்பாற்றுங்கள்……….!- களப்பாள் குமரன்
எது சொந்தம்? - கவிஞர் இராமச்சந்திரன்
சோர்விற்கு விடைகொடு! - தத்துவக் கவிஞர் இ பத்ருத்தீன்
தமி்ழ்க் கோட்டம் அமைய நன்கொடை வேண்டுகிறோம்!
அன்று இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் – இன்று எம் உள்ளத்தில்
இனி வேண்டா எதிர்மறை எண்ணங்கள் - சு.கிருட்டிணன்
மருமகள் - க.தமிழமல்லன்
களம்
வெல்வாய்! - ஈரோடு இறைவன்
ஈழத்தில் இறந்தவர்களுக்கு இங்கு ஏன் நினைவிடம்? – - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு
காக்கும் எம்மொழி ஆள்வோர் அறிக - தூயவன்
முதலான
செய்திகள், கவிதைகள், கட்டுரைகள், பாவியம், தொடர்கள்
எனப்பலவும் இடம் பெற்றுள்ளன. தங்கள்
படைப்புகளையும் செய்திகளையும் (நல்ல) தமிழில் அனுப்பி வைக்க வேண்டுகின்றேன்.
நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகின்றேன்.
தமிழைப்பற்றி எழுதினால் தீட்டுப்பட்டுவிட்டது எனக் கருதும்
சில குழுவின் நண்பர்கள், அவ்வாறு கருதாமல், இவ்விதழில்
படைப்புகளையும் செய்திகளையும் அளித்துப் பங்கேற்கலாம் என்பதால், பயன்படுத்திக்
கொள்ள வேண்டுகின்றேன்.
கணித்தமிழ்ச்சங்கம், உத்தமம்
குழுவினர் கணியறிவியல் சார்ந்த கட்டுரைகள், சொல்லாக்கங்கள், ஆகியவற்றை அளிப்பதுடன்
தாங்கள் உருவாக்கும் கணியன்கள் பற்றிய அறிமுகங்களையும் அளிக்க வேண்டுகின்றேன்.
நன்றி.
தங்கள் அன்புள்ள
இலக்குவனார் திருவள்ளுவன்
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக