மூவர் உயிர் காப்போம் - கருத்தைத் திரட்டும் கவிதை, கட்டுரைப் போட்டி
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (திருக்குறள் 579)
மூவர் உயிரைக் காத்திடுக ! மூவாப்புகழைப் பெற்றிடுக !
தமிழ்க்காப்புக் கழகம் தொகுக்கும்
மக்கள் முறையீட்டுக்
கவிதை, கட்டுரைப் போட்டிகள்
மனிதநேய ஆர்வலர்களே!
மரணத்தண்டனையினும் கொடியது அதனை எதிர்நோக்கிச் சிறை வாழ்க்கையைக் கழிப்பது என நீதிபதிகளாலேயே சொல்லப்பட்ட கொடுந்தண்டனையால் துன்புறுபவர்கள்
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் ஆவர்.
இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மக்களின் கருத்துக்களைத் திரட்டி அவை, தடை வழக்கு நீதிபதி, முதல்வர் முதலானவர்களுக்கு அனுப்பி வைக்கப் பெறும். இதனை முன்னிட்டு விடுதலை முறையீடுகளைக் கவிதை, கட்டுரை வடிவில் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.- கவிதை 24 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- கட்டுரை 4 பக்க அளவில் இருக்க வேண்டும்.
படைப்புகளை 5.9.2011 ஆம் நாளுக்குள் thamizh.kazhakam@gmail.com என்னும் மின்வரிக்கு அனுப்ப வேண்டும். எல்லா அகவையினரும் எல்லா நாட்டினரும் கலந்து கொள்ளலாம். தங்கள் பெயர், அகவை, பேசி எண் மற்றும் முகவரியைக் குறிப்பிடவும்.
பங்கேற்போர் எண்ணிக்கைக்கேற்ப தமிழ்க்காப்புக்கழக நிறுவனர் பேராசிரியர் சி.இலககுவனார் அவர்களின் 38 ஆவது நினைவு நாளை முன்னிட்டுப் பரிசுகளும் வழங்கப் பெறும். பரிசுகள் அடிப்படையில் இல்லாமல் உணர்வின் அடிப்படையில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இளந்தலைமுறையினரைப் பங்கேற்கச் செய்து தமிழ் அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் படைப்புகளைப் பெற்று அனுப்பலாம்.
மக்கள் கருத்தைத் திரட்டி மூவருக்கும் விடுதலை வழங்கச் செய்வோம்.
தொடர்பிற்கு
இலக்குவனார் திருவள்ளுவன்,
தலைவர்
பேசி: 98844 81652
அரு.வள்ளியப்பன்,
செயலர்
பேசி: 98840 57744
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக