புதன், 16 ஜூன், 2010

தீவிரவாத ஒழிப்பு: இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு



கொழும்பு, ஜூன்15: தீவிரவாதத்தை ஒழித்ததற்காக இலங்கை அரசுக்கு அமெரிக்கா பாராட்டுத் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை உடனான உறவை மேம்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஓபாமாவின் பன்முனைச் செயலர் சமாந்த பவர் மற்றும் போர் குற்றங்களின் இயக்குனர் டேவிட் பிரஸ்மேன் ஆகியோர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை செவ்வாய்க் கிழமை சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது, கடந்த மே மாதம் நடைபெற்ற போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றதை அமெரிக்க அதிபர் பாராட்டியதாக கூறினர். அமெரிக்காவும் தீவிரவாதத்தால் பாதிப்புக்குள்ளான நாடு என்று தெரிவித்தனர். இலங்கைக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையேயான உறவுகள் மேம்படவேண்டும் என்றும் இருநாடுகளும் விருப்பம் தெரிவித்தன.
கருத்துக்கள்


மிகப் பேரளவிலான மனிதப் பேரழிவுகளை நிகழ்த்தியதைத் தீவிரவாதிகள் ஒழிப்பு என்று அமெரிக்காவும் கூறுகிறது என்றால் அதன் பங்கும் அழிப்பு வேலைகளில் இருந்தது என்பது உண்மையாகிறது. உண்மையின் பக்கம் யாரும் இல்லாததால் தமிழர்களின் பக்கம் யாரும் இல்லை. மனித நேயமும் மக்களாட்சி உரிமைகளில் நம்பிக்கையும் உடைய அமெரிக்க மக்களிடம் உண்மையை எடுத்துரைத்து ஆதரவைப் பெற்று அரசுவன்முறை ஆதரவு ஆட்சியைத் தூக்கி எறிய ஆவன செய்க! வெல்க தமிழ் ஈழம்! வளர்க அமெரிக்க ஈழ நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/16/2010 3:34:00 AM

UTTERR STUPIDITY! The aspiration for and expression by the Eezahmite tamils for as eparate and soeveregn country of their own, "THAMIZH EEZHAM" and the struggle by the trained force of LIBERATION TIGERS OF TAMIL EEZHAM has been dubbed "extremism" Why WAS the USA in the Vietnam amd caused events My lai massacre? If The USA had the cause of containing communism in Asia, so did the LTTE to win back freedom to the enslaved eezhamite tamils and liberate their territory lost to the majority Sinhales due to the colonioal rule in the island. If Tamils had had one single sovereign country of their own, they will decry the statement like that of Samantha Power referred to above who is a special adviser to President Barack Obama and Director of Multilateral Affairs for the National Security Council. She is of Irish origin and she cna not be without knowing the liberation of Ireland from Brisitish rule. It is all game fo diplomacy and NOT adhereing to the values or principles of human digintiy

By P
6/16/2010 2:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக